இந்தியா

‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ குறித்த விவாதம்: காங்கிரஸ் இன்று முடிவு

‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ குறித்த விவாதம்: காங்கிரஸ் இன்று முடிவு

webteam

பிரதமர் மோடி இன்று கூட்டியுள்ள கூட்டத்தில் பங்கேற்பது குறித்து காலையில் முடிவு செய்யப்படும் என காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தெரிவித்துள்ளன.

ஒரே தேசம், ஒரே தேர்தல் என்பது குறித்து விவாதிப்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி தலைமையில், அனைத்துக் கட்சிக் கூட்டம், இன்று நடைபெறுகிறது. இந்தியாவின் 75-வது சுதந்திர தினத்தை கொண்டாடுவது குறித்தும், மகாத்மா காந்தியின் 150-வது பிறந்தநாளை கொண்டாவது பற்றியும் இக்கூட்டத்தில் விவாதிக்கப்படுகிறது. 

இந்நிலையில், நேற்று மாலை நாடாளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சிகள் கூட்டம், ஐக்கிய முற்போக்கு கூட்டணி தலைவர் சோனியா காந்தி தலைமையில் நடைபெற்றது. இதில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, திமுக சார்பில் டி.ஆர்.பாலு, கனிமொழி, தேசிய மாநாட்டு கட்சியின் ஃபரூக் அப்துல்லா, தேசியவாத காங்கிரஸ் கட்சியின் சுப்ரியா சுலே, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் டி.ராஜா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 

கூட்டத்துக்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய சோனியா காந்தி, பிரதமர் அழைத்துள்ள கூட்டத்தில் பங்கேற்பது குறித்து, இன்று காலை முடிவு செய்யப்படும் என்று தெரிவித்தார்.