அயோத்தி ராமர் கோயில் நிதியில் மோசடி நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில், எதிர்க்கட்சிகள் நாடாளுமன்ற வளாகத்தில் வினோத போராட்டம் நடத்தினர். எம்.பி.க்கள் கைகளில் சிறு உண்டியல்களை ஏந்தி கோஷம் எழுப்பி, ராகுல் காந்தி, அகிலேஷ் யாதவ் உள்ளிட்டோர் உண்டியலில் பணம் போட்டு எதிர்ப்பை வெளிப்படுத்தினர். பக்தர்களின் நிதி மோசடி குறித்த குற்றச்சாட்டில் சுதந்திர விசாரணை கோரி பிரதமருக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
அயோத்தி ராமர் கோயில் நிதியில் மோசடி நடந்துள்ளதாகக் கூறி, நாடாளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சிகள் வினோத போராட்டத்தில் ஈடுபட்டன. கைகளில் சிறு உண்டியல்களை ஏந்திய எம்பிக்கள் கோஷம் எழுப்பினர்.
ராகுல் காந்தி, அகிலேஷ் யாதவ் உள்ளிட்டோர் உண்டியலில் பணம் போட்டுத் தங்கள் கண்டனத்தைப் பதிவுசெய்தனர். மேலும், பக்தர்களின் நிதி மோசடி செய்யப்பட்டது குறித்து சுதந்திரமான விசாரணை நடத்தக் கோரி ராகுல் காந்தி, கார்கே ஆகியோர் பிரதமருக்குக் கடிதம் எழுதியுள்ளனர்.