இந்தியா

2020 ஆண்டின் மெல்லிய ஸ்மார்ட்போன்.. இன்று அறிமுகமாகும் ஓப்போ F17 ப்ரோ..!

JustinDurai

2020 ஆண்டின் மெல்லிய ஸ்மார்ட்போன் ஆன OPPO F17 Pro என்ற புதிய மாடல் இன்று அறிமுகமாகிறது. 

இன்று (செப்டம்பர் 2) மாலை 7 மணியளவில், ஹார்டி சந்து மற்றும் ராஃப்டார் ஆகியோரைக் கொண்ட துள்ளலான ஆன்லைன் இசை நிகழ்ச்சியில், ஓப்போ நிறுவனம் தனது F17 Pro என்ற புதிய மாடலை அறிமுகப்படுத்துகிறது. இந்நிகழ்ச்சியை டிவி நடிகர் ரித்விக் தஞ்சானி தொகுத்து வழங்குகிறார்.

ஓப்போ F17 ப்ரோ போர்ட்ரெய்ட் கேமராக்கள் மற்றும் பிற புதுமையான அம்சங்களை வழங்குகிறது. இந்த மாடல் ஆனது 7.48 மி.மீ. அளவைக் கொண்டிருக்கும். இந்தளவு மெலிதான மாடல் இதுவரை இல்லாதது ஆகும். மேலும் இது 164 கிராம் எடையுள்ளதாக இருக்கும்.

வெள்ளை, ஆரஞ்சு, நீலம், சாம்பல் மற்றும் கருப்பு ஆகிய நிறங்களில் கிடைக்கும். பின்புற பேனலில் 48 மெகாபிக்சல் குவாட் கேமரா அமைப்பைக் கொண்டிருக்கும். முன்பக்கத்தைப் பொறுத்தவரை, இது 16 மெகாபிக்சல் பிரைமரி லென்ஸ் மற்றும் 2 மெகாபிக்சல் ஆழம் சென்சார் கலவையுடன் டபுள் முன் கேமராவுடன் வரும்.