இந்திய விமானப்படைத் தலைமைத் தளபதி ஏ.பி.சிங்  முகநூல்
இந்தியா

OPERATION SINDOOR|“பாகிஸ்தானின் 5 போர் விமானங்களை சுட்டு வீழ்த்தினோம்” இந்திய விமான படை தலைவர்..!

ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலில் பாகிஸ்தானின் ஒரு விமானம் கூட இந்தியாவால் சுட்டு வீழ்த்தப்படவில்லை என அந்நாட்டு பாதுகாப்புத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

Vaijayanthi S

ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலில் பாகிஸ்தான் விமானப்படையின் 5 போர் விமானங்களை இந்திய விமானப்படை சுட்டு வீழ்த்தியதாக, இந்திய விமானப்படைத் தலைமைத் தளபதி ஏ.பி.சிங் தெரிவித்தார். மேலும், ஒரு பெரிய ரக விமானமும் சுட்டு வீழ்த்தப்பட்டதாக அவர் குறிப்பிட்டார். சுமார் 300 கி.மீ.தொலைவில் இருந்து ஏவுகணை மூலம் அந்தப் பெரிய விமானம் தாக்கப்பட்டதாகவும், இதுவே இந்திய விமானப்படையின் மிக நீண்ட தூரதாக்குதல் என்றும் அவர் குறிப்பிட்டார். ஆபரேஷன் சிந்தூர் தாக்குதல் குறித்த தகவலை இந்திய விமானப்படைத் தலைவர் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்துவது இதுவே முதல்முறையாகும்.

பயங்கரவாத முகாம் ஒன்றைத் தாக்கியதற்கான புகைப்பட ஆதாரங்களை வெளியிட்ட அவர், இந்திய பிராந்தியத்தில் விழுந்த பாகிஸ்தானின் ஆளில்லா விமானங்கள் மற்றும் ஏவுகணைகளின் பாகங்கள் கைப்பற்றப்பட்டு ஆய்வு செய்யப்பட்டு வருவதாக குறிப்பிட்டார். சமீபத்தில் வாங்கப்பட்ட எஸ்-400 (S-400) பாதுகாப்பு அமைப்பு சிறப்பாகச் செயல்பட்டதால், பாகிஸ்தான் விமானங்களால் நமது எல்லைக்குள் நுழைய முடியவில்லை என்றும் அவர் தெரிவித்தார். ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலில் பாகிஸ்தானின் ஒரு விமானம் கூட இந்தியாவால் சுட்டு வீழ்த்தப்படவில்லை என அந்நாட்டு பாதுகாப்புத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலில் பாகிஸ்தான் விமானப்படையின் 5 போர் விமானங்களை இந்திய விமானப்படைசுட்டு வீழ்த்தியதாக, இந்தியவிமானப்படைத் தலைமைத் தளபதி ஏ.பி.சிங் தெரிவித்த சில மணிநேரங்களுக்குப் பிறகு, இந்த கருத்தைபாகிஸ்தான் பாதுகாப்புத்துறை அமைச்சர் கவாஜா ஆஃசிப் குறிப்பிட்டுள்ளார். இந்திய விமானப்படை தலைமைத் தளபதியின் கூற்று நம்பத்தகுந்தவை அல்ல என்றும் அவர் கூறியுள்ளார்.