இந்தியா

நாட்டில் 26 சதவிகிதம் பேருக்கு மட்டுமே இந்தி தாய்மொழி 

நாட்டில் 26 சதவிகிதம் பேருக்கு மட்டுமே இந்தி தாய்மொழி 

webteam

நாட்டில் இந்தி பேசுபவர்களில் வெறும் 26 சதவிகிதம் பேர் மட்டுமே இந்தியை தாய்மொழியாக கொண்டுள்ளனர் என்று மொழி வாரியான கணக்கெடுப்பின் மூலம் தெரிய வந்துள்ளது. 

நாட்டின் ஒரே மொழியாக இந்தி இருந்தால் இந்தியாவை உலக அரங்கில் அடையாளப்படுத்த முடியும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்தார். அடுத்த ஆண்டு முதல் இந்தி தினத்தை பொது நிகழ்ச்சியாக கொண்டாட வேண்டும் எனவும் அமித் ஷா தெரிவித்திருந்தார். இதற்கு தமிழகம், கர்நாடகா உள்ளிட்ட தென்மாநிலத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். 

மொழி வாரியான மக்கள் கணக்கெடுப்பு 2011ஆம் ஆண்டு நடத்தப்பட்டது. இந்தக் கணக்கெடுப்பில் நாட்டில் இந்தி மொழியை பேசுவோர் 43.63 சதவிகிதம் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் தொகையில் 60 சதவிகிதம் பேர் மட்டுமே இந்தி மொழியை பேசுகிறார்கள் எனக் கூறப்பட்டுள்ளது. இவர்களில் 26.6 சதவிகிதம் பேர் மட்டுமே இந்தியை தாய் மொழியாக கொண்டவர்கள் எனத் தெரியவந்துள்ளது. 

போஜ்பூரி, ராஜஸ்தானி, சத்தீஸ்கரி, ஹர்யான்வி, மார்வாரி உள்ளிட்ட 26 வட்டார மொழிகளில் இந்தி கலந்து பேசுவோர் 33.4 சதவிகிதம் பேர் என 2011ஆம் ஆண்டு நடத்தப்பட்ட ஆய்வில் இருந்து தெரியவந்துள்ளது. மேலும் இந்தக் கணக்கெடுப்பில் அவாதி, போஜ்பூரி, சத்தீஸ்கரி, மகதி, ஹரியான்வி, மார்வாரி, ராஜஸ்தானி உள்ளிட்ட மொழிகள் இந்தியின் கீழ் கணக்கிடப்பட்டுள்ளது. ஆகவே தான் இந்தி பேசும் மக்களின் சதவிகிதம் நாட்டில் 43.63 சதவிகிதமாக இருப்பது குறிப்பிடத்தக்கது.