இந்தியா

நோ கேஷ்.. ஒன்லி ஆன்லைன் பேமண்ட்: மத்திய அரசு தடாலடி!

Rasus

கல்லூரிகள், உயர்கல்வி நிறுவனங்கள் மற்றும் பல்கலைக்கழகங்களில் கல்விக் கட்டணத்தை ரொக்கமாக செலுத்தக் கூடாது என்று மத்திய அரசு தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.

இதுதொடர்பாக, கல்வி நிறுவனங்களுக்கு மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை உத்தரவுக் கடிதம் அனுப்பியுள்ளது. கல்விக் கட்டணத்தை மாணவர்கள் ரொக்கமாக செலுத்தாமல் இணையதள பணப்பரிமாற்றம் உள்ளிட்ட மாற்று வழிகளில் செலுத்துவதை உறுதி செய்யுமாறு அதில் உத்தரவிடப்பட்டுள்ளது. நடப்பு கல்வியாண்டிலேயே இதை அமல்படுத்த வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது. கல்விக் கட்டணம், தேர்வுக் கட்டணம், விடுதிக் கட்டணம் உள்ளிட்ட அனைத்துக் கட்டணங்களும் இதில் அடங்கும் என்றும் கூறப்பட்டுள்ளது. அதேபோல், கல்வி நிறுவனங்களில் ஊழியர்களுக்கு சம்பளத்தையும் மின்னணு முறையில் மட்டுமே மேற்கொள்ளவும் மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.