இந்தியா

ஓஎன்ஜிசி இருப்புத் தொகை ஒன்றரை ஆண்டில் ரூ167 கோடியாக சரிவு

webteam

பிரதமர் மோடியின் ஒன்றரை ஆண்டுகால ஆட்சியில் ஓஎன்ஜிசி எண்ணெய் நிறுவனத்தின் இருப்பு தொகை 9511 கோடியிலிருந்து 167 கோடி ரூபாயாக குறைந்துள்ளது தெரியவந்துள்ளது.

ஓஎன்ஜிசி எண்ணை நிறுவனம் மத்திய அரசின் கட்டுபாட்டிற்குள் இயங்கும் பொதுத்துறை நிறுவனம். இந்நிறுவனம் இந்தியாவில் எண்ணெய் ஏற்றுமதி செய்யும் மிகப்பெரிய பொதுத்துறை நிறுவனம். இந்த நிறுவனத்தில் கடந்த 2017ஆம் ஆண்டு மார்ச் மாதம் இருப்பு தொகையாக 9511 கோடி ரூபாயாக இருந்தது. ஆனால் அரசு எடுத்த கொள்கை முடிவுகளால் அந்த நிறுவனத்தின் இருப்புத் தொகை தற்போது குறைந்துள்ளதாக கூறப்படுகிறது. 

அதன்படி 2018ம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் ஓஎன்ஜிசியின் இருப்பு தொகை 167 கோடி ரூபாயாக குறைந்துள்ளது தெரியவந்துள்ளது. இதற்கு காரணம் மத்திய அரசு மேற்கொண்ட பங்குகள், ஈவு தொகை விற்பனை செய்ததும் மற்றும் பிற பொதுத்துறை எண்ணைய் நிறுவனத்தின் பங்குகளை வாங்கியதேயாகும் என்று கூறப்படுகிறது. குறிப்பாக ஓஎன்ஜிசி தன்னுடைய இருப்பு தொகையிலிருந்து கடன்களை செலுத்திவருகிறது. இதனால் 25,592 கோடியாக இருந்த கடன் 2018 செப்டம்பர் மாதம் 13,994 கோடியாக குறைந்துள்ளது.