இந்தியா

ஜிஎஸ்டியால் குறைந்ததும், உயர்ந்ததும் !

ஜிஎஸ்டியால் குறைந்ததும், உயர்ந்ததும் !

webteam

ஜிஎஸ்டியால் கடந்த ஓராண்டில் விலை குறைந்த, விலை உயர்ந்த பொருட்கள், சேவைகளில் சிலவற்றைப் பார்க்கலாம்.

காபி, டீ மீதான வரி, பத்தில் இருந்து 5 சதவிகிதமாகவும் சமையல் எண்ணெய் மீதான வரி 15 சதவிகிதத்தில் இருந்து 5 ஆகவும் குறைந்தது. சாக்லெட்கள் மீதான வரி 29ல் இருந்து 18 சதவிகிதமாக, அதாவது 11 சதவிகிதம் குறைந்தது. ஐஸ்கிரீம் மீதான 22.5 சதவிகித வரி 18 ஆனதில் 4.5 சதவிகித வரிக்குறைப்பு செய்யப்பட்டது. குளியல் மற்றும் சலவை சோப்கள் மீதான வரி 30.5 சதவிகிதத்தில் இருந்து 18 ஆனதில் 12.5 சதவிகிதம் வரி குறைந்தது. தொலைக்காட்சிப் பெட்டி மீதான வரி 30.5 சதவிகிதத்தில் இருந்து 18 சதவிகிதமானது. மருந்துகள் மீதான வரி 15 சதவிகிதத்தில் இருந்து 12 சதவிகிதமாக குறைந்தது.

மாறாக, செல்போன் ரீசார்ஜ் மீதான வரி 15ல் இருந்து 18 சதவிகிதமாக உயர்த்தப்பட்டது. பொதுக் காப்பீடுக்கான வரியும் இதே அளவு உயர்ந்தது. கோழிக்கறி மீதான வரி 9 சதவிகிதத்தில் இருந்து 12 சதவிகிதமானது. வெண்ணெய் மீதான வரி 6ல் இருந்து 12 சதவிகிதமாக, அதாவது இருமடங்காக உயர்ந்தது.