இந்தியா

34 ஆண்டுகளுக்கு முந்தைய வழக்கு: நவ்ஜோத் சிங் சித்துவிற்கு ஓராண்டு சிறை

Sinekadhara

முன்னாள் கிரிக்கெட் வீரரும், பஞ்சாப் மாநில காங்கிரசின் முன்னாள் தலைவருமான நவ்ஜோத் சிங் சித்துவிற்கு 34 ஆண்டுகளுக்கு முந்தைய வழக்கில், ஓராண்டு சிறை தண்டனை விதித்து உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.

பஞ்சாப் மாநிலம் பாட்டியாலாவில் 1988 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் வாகனம் நிறுத்தும் இடம்தொடர்பாக நவ்ஜோத் சிங் சித்துவிற்கும் மற்றொருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது சித்து மற்றும் அவருடன் இருந்த நண்பரும் தாக்கியதாகக் கூறப்படும் 65 வயது நபர் உயிரிழந்தார். இதுதொடர்பான வழக்கில் சித்துவிற்கு ஹரியானா நீதிமன்றம் 3 ஆண்டு சிறை தண்டனை விதித்தது. இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் சித்து தொடர்ந்த வழக்கில், 2018ஆம் ஆண்டு சிறை தண்டனையில் இருந்து விடுவித்து ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.

ஆனால் தீர்ப்பை மறுஆய்வு செய்யக் கோரி பாதிக்கப்பட்டவர் தரப்பில் தொடரப்பட்ட வழக்கினை விசாரித்த உச்சநீதிமன்றம், சித்துவிற்கு ஓராண்டு சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. இதுகுறித்து பேசிய சித்து சட்டத்திற்கு உட்பட்டு நடப்பேன் என்று கூறியுள்ளார்.