இந்தியா

’ஒரே நாடு ஒரே ரேசன் திட்டம்’ நாளை முதல் தமிழகத்தில் அமல்.!

webteam

ஒரே நாடு ஒரே ரேசன் திட்டத்தை முதல்வர் நாளை தொடங்கி வைக்கிறார்.

வாழ்வாதாரத்திற்காக வெளிமாநிலம் இடம்பெயரும் தொழிலாளர்களுக்கும் ரேசன் பொருட்கள் கிடைக்கும் வகையில் மத்திய அரசு ஒரே நாடு ஒரே ரேசன் திட்டத்தை அறிமுகப்படுத்தியது. தமிழகத்தில் நாளை முதல் இத்திட்டம் அமலுக்கு வர உள்ள நிலையில், அமைச்சர்களுடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி இத்திட்டத்தை நாளை தொடங்கி வைக்கிறார்.

இதன் மூலம் பிற மாநிலத்தவர்களும் ரேசன் கடைகளில் பொருட்களை வாங்க இயலும். ரேசன் பொருட்கள் வாங்கச் செல்லும் நபரின் பெயரானது ரேசன் அட்டையில் இருத்தல் அவசியம். அவரின் கைரேகை பதிவு செய்த பின்னர், அவருக்கான ரேசன் பொருட்கள் வழங்கப்படும். இதற்கான இயந்திரங்கள் இன்று அனைத்து ரேசன் கடைகளுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.