ஒரே நாடு ஒரே தேர்தல் முகநூல்
இந்தியா

இன்றைக்கு பதில் நாளை...மக்களவைவில் தாக்கல் செய்யப்படவுள்ள ஒரே நாடு ஒரே தேர்தல்!

ஒரே நாடு, ஒரே தேர்தல் திட்டத்திற்கான மசோதாக்களை மத்திய அரசு நாடாளுமன்றத்தில் இன்றைக்கு பதில் நாளைக்கு தாக்கல் செய்யவிருப்பதாக தகவல் வெளியாகிவுள்ளது.

PT WEB

அரசமைப்பு சட்ட திருத்த மசோதா, யூனியன் பிரதேசங்கள் சட்ட திருத்த மசோதா என இரண்டு மசோதாக்களை மத்திய அரசு செவ்வாய்கிழமை தாக்கல் செய்யும் என டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஏற்கெனவே, இந்த மசோதாவுக்கு கடந்த சில தினங்களுக்கு முன்பு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. அதே வேளையில், நாடு முழுவதும் ஒரே நேரத்தில் மக்களவை மற்றும் மாநில சட்டப்பேரவைகளுக்கு தேர்தல் நடத்தும், ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்திற்கு காங்கிரஸ், திமுக, திரிணாமூல் காங்கிரஸ் என எதிர்க்கட்சிகள் கடுமையாக எதிர்ப்புகளை பதிவு செய்து வருகின்றன.

எனவே, மசோதா நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யவிருப்பதால் இதுதொடர்பாக பிரச்னைகளை எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன. மசோதா தாக்கல் செய்யப்பட்டதற்கு பிறகு நாடாளுமன்ற கூட்டுக்குழு பரிசீலனைக்கு அனுப்பப்படும் என்று தெரிகிறது.