கர்நாடகா pt
இந்தியா

கர்நாடகா|கபடி போட்டியின்போது திடீரென சரிந்து விழுந்த பார்வையாளர் மாடம்!

போட்டியை காண பலர் குவிந்திருந்தநிலையில் இந்த விபத்து சம்பவம் நடந்திருக்கிறது.

ஜெனிட்டா ரோஸ்லின்

கர்நாடகாவில் நடந்த கபடி போட்டியின்போது பார்வையாளர் மாடம் சரிந்து விழுந்ததில் ஒருவர் உயிரிழந்தநிலையில், பலர் காயம் அடைந்துள்ளதாக அதிர்ச்சிகர தகவல் வெளியாகியுள்ளது.

கர்நாடக மாநிலம் மண்டியா தாலுகாவில் உள்ள மல்லநாயக்கன கட்டே கிராமத்தில் சனிக்கிழமை இரவு நடைபெற்றது கபடிபோட்டி. 23 வயதுக்குட்பட்ட இளைஞர்களுக்காக தொடங்கப்பட்ட இப்போட்டி துரோணா வாரியர்ஸ் கிளப்புடன் இணைந்து மைசூர்-கோட்ட அளவில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஏப்ரல் 26 மற்றும் 27 ஆகிய தேதிகளில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், சனிக்கிழமை நடந்த போட்டியை காண்பதற்காக தற்காலிகமாக அமைக்கப்பட்டிருந்த பார்வையாளர் மாடம் ஒன்று திடீரென சரிந்தது . இதில், ஒருவர் உயிரிழந்தநிலையில், 15 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றனர். போட்டியை காண பலர் குவிந்திருந்தநிலையில் இந்த விபத்து சம்பவம் நடந்திருக்கிறது.

இதில் இறந்தவர் மல்லநாயக்கன கட்டே கிராமத்தை சேர்ந்த 45 வயதுடைய பாபனிச்சர் என்று அடையாளம் காணப்பட்டுள்ளது. காயமடைந்தோர் மண்டியா மருத்துவ அறிவியல் நிறுவனத்தில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.