இந்தியா

லக்னோ மெட்ரோ ரயில் சேவை; முதல் நாளன்றே கோளாறு

லக்னோ மெட்ரோ ரயில் சேவை; முதல் நாளன்றே கோளாறு

webteam

உத்தரப் பிரதேச தலைநகர் லக்னோவில் நேற்று தொடங்கப்பட்ட மெட்ரோ ரயில் சேவையில், முதல் நாளான இன்று தடங்கல் ஏற்பட்டது. 

அலம்பாக் என்ற ரயில் நிலையம் அருகே மெட்ரோ ரயிலில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டது. அதனையடுத்து மெட்ரோ சேவை தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. இதனால் ரயிலில் சென்ற பயணிகள் ஏமாற்றம் அடைந்ததுடன், சிரமத்திற்கும் ஆளாகினர். ரயில் சேவை தொடங்கிய முதல் நாளிலேயே பாதி வழியில் நின்றதும், ஒரு மணி நேரம் ரயிலுக்கு விளக்குகள் மற்றும் மின்சார வசதியின்றி பயணிகள் தவித்துள்ளனர்.