இந்தியா

மீண்டும் சீனா செல்லும் பிரதமர் மோடி

மீண்டும் சீனா செல்லும் பிரதமர் மோடி

webteam

ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் மாநாட்டில் கலந்துகொள்வதற்காக பிரதமர் நரேந்திர மோடி இரண்டு நாள் பயணமாக சீனா செல்லவுள்ளார். 

சீனாவின் ஆதிக்கம் மிக்க ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பில் இந்தியா கடந்த ஆண்டு நிரந்தர உறுப்பினரானது. இந்த அமைப்பில் எட்டு நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன. இந்த அமைப்பின் மாநாடு சீனாவின் கிண்டாவ் நகரில் நாளை நடைபெறவுள்ளது. நாளை அங்கு செல்லும் பிரதமர், சீன அதிபர் ஜி ஜின்பிங்குடன் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார். அப்போது இருநாட்டு உறவுகளை வலுப்படுத்துவது தொடர்பாக அவர்கள் பேச்சுவார்த்தை நடத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுறது. 

இரு நாட்டு தலைவர்கள் சமீபத்தில் அரசுமுறை அல்லாத வகையில் சந்தித்து பேசியதைத் தொடர்ந்து நாளை முறையாக சந்தித்துப் பேசவுள்ளனர். ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு மாநாட்டில் பயங்கரவாதத்தை ஒழிக்க அனைத்து நாடுகளும் இணைந்து செயல்படுவதன் அவசியத்தை இந்தியா வலியுறுத்தும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.