இந்தியா

'உள்நாட்டு உற்பத்தியாளர்கள் உலகளாவிய தரத்தை பராமரிக்க வேண்டும்' - பிரதமர் மோடி

JustinDurai

தீபாவளியன்று, மட்கலங்களால் செய்யப்பட்ட அகல் விளக்குகளை வாங்குவது மட்டுமே உள்ளூர் மக்களுக்கு குரல் கொடுப்பதாக ஆகாது என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

பட்ஜெட்டுக்குப் பிந்தைய, இணையதளத்தில் 'மேக் இன் இந்தியா ஃபார் தி வேர்ல்ட்' என்ற தலைப்பிலான மாநாட்டில் பிரதமர் பங்கேற்றார். அப்போது உரை நிகழ்த்திய அவர், உள்நாட்டு உற்பத்தியாளர்கள் உலகளாவிய தரத்தை பராமரிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். ஆராய்ச்சி அடிப்படையிலான எதிர்கால அணுகுமுறை தேவை என்றும், அதற்கு நாம் பெரிய அளவில் சிந்திக்க வேண்டும் என்று மோடி குறிப்பிட்டார்.

இதையும் படிக்க: "இந்தியர்களை மீட்க என்னென்ன திட்டங்கள்?" - ராகுல்காந்தி வலியுறுத்தல்