இந்தியா

மெட்ரோ ரயில் நிலையத்தில் மோதல்: துப்பாக்கியால் சுட்ட பாதுகாப்பு படை வீரர்

மெட்ரோ ரயில் நிலையத்தில் மோதல்: துப்பாக்கியால் சுட்ட பாதுகாப்பு படை வீரர்

webteam


டெல்லி மெட்ரோ ரயில் நிலையத்தில் ஏற்பட்ட மோதலை தடுக்க மத்திய தொழில் பாதுகாப்புப் படை வீரர் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்ட காட்சி சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. 

டெல்லியில் உள்ள மெட்ரோ ரயில் நிலையத்தில் தனி நபர் ஒருவரை சிலர் சூழ்ந்துக்கொண்டு சரமாரியாகத் தாக்கியுள்ளனர். அப்போது அங்கு பணியில் இருந்த மத்திய தொழில் பாதுகாப்புப் படை வீரர் அந்த நபரை மீட்பதற்காக வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டார். அதன்பின்னரும் தாக்குதல் தொடர்ந்ததால், பாதுகாப்புப் படையைச் சேர்ந்த மேலும் சிலர் அங்கு வந்து, தாக்குதலுக்கு ஆளானவரை மீட்டனர். என்ன காரணத்திற்காக அந்த நபர் தாக்கப்பட்டார் என்பது பற்றிய விவரம் தெரியவில்லை. இந்தக்காட்சிகள் ரயில் நிலையத்தில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. இந்தக் காட்சிகளை கொண்டு தாக்குதல் நடத்திய நபர்கள் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.