மகாராஷ்டிரா மாநிலத்தில், 4 வயது பெண் குழந்தை ஒன்று 12 ஆவது மாடியிலிருந்து தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் துயரத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியிருக்கிறது . இதுகுறித்தான சிசிடிவி காட்சிகள் வெளியாகி காண்போரை பெரும் சங்கடத்தில் ஆழ்த்தியுள்ளது.
மகாராஷ்டிரா மாநிலம் வசாய் பகுதியில் வசித்துவரும் தம்பதிக்கு 4 வயதில் பெண் குழந்தை ஒன்று உள்ளது. அவர் பெயர் அன்விகா பிரஜாபதி. சம்பவதினத்தன்று நைகானில் அமைந்துள்ள நவ்கர் நகர் குடியிருப்பில், குழந்தையுடன் வெளியே செல்ல தாயார் தயாராகிக் கொண்டிருந்தார்.
அப்போது, சுட்டி தனமாக விளையாடி கொண்டிருந்த அன்விகா பெரியவர்களின் காலணியில் தனது கால்களை இட்டு நடக்க ஆரம்பித்தாள். அவள் சுட்டு தனமாக விளையாடி கொண்டிருந்ததை கண்ட அவளது தாய், ஒரே இடத்தில் அமைதியாக அமர வைக்க குழந்தையை ஜன்னல் அருகே காலணி பெட்டி மீது அமர வைத்துவிட்டு, தாயார் காலணி மாட்டிக் கொண்டிருந்தார்.
அந்த சமயத்தில் குழந்தை ஜன்னலில் ஏறி அமரவும், திறந்து வைக்கப்பட்டிருந்த அந்த ஜன்னலில் பாதுகாப்புக் கம்பிகள் எதுவும் இல்லாத நிலையில், 12 ஆவது மாடியிலிருந்து தவறி விழுந்தது குழந்தை. கண் இமைக்கும் நேரத்தில் குழந்தையின் உயிர் பறிபோனது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த புதன்கிழமை (25.7.2025) மாலை 8 மணியளவில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது, இது தொடர்பாக சிசிடிவி காட்சிகள் வெளியாக காண்போரை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
தாயின் அலறல் சத்தம் கேட்டு, அக்கம்பக்கத்தினர் உதவிக்கு விரைந்தனர். அவர்கள் உடனடியாக சிறுமியை வசாய் மேற்கில் உள்ள சர் டிஎம் பெட்டிட் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் அறிவித்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அன்விகாவின் திடீர் மரணம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும், அவரது குடும்பத்தினர் அன்சிகாவின் இழப்பால் மிகவும் துயரத்தில் உள்ளனர். விசாரணையின் ஒரு பகுதியாக, சாட்சிகளுடன் போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர்.மேலும், சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர்.