இந்தியா

ஜெனிவா, சுவிட்சர்லாந்து 77 நாடுகளுக்கு பரவியது ஒமைக்ரான் - உலக சுகாதார அமைப்பு

கலிலுல்லா

உருமாறிய ஒமைக்ரான் கொரோனா வைரஸ் 77 நாடுகளுக்கு பரவியுள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

ஜெனிவாவில் செய்தியாளர்களிடம் பேசிய உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதனாம், முந்தைய உருமாறிய கொரோனா வகைகளைவிட, ஒமைக்ரான் வைரஸ் வேகமாக பரவி வருகிறது என்றார். தற்போது77 நாடுகளில் ஒமைக்ரான் பரவியிருந்தாலும், உரிய சோதனை நடத்தாதால், பல நாடுகளில் அவை இருப்பது தெரியாமல் இருக்கலாம் என்றார்.

ஒமைக்ரான் பரவலை தடுப்பதற்காக பூஸ்டர் தடுப்பூசி போடுவதை உலக சுகாதார அமைப்பு எதிர்க்கவில்லை என்றும், அதேநேரத்தில், இதை காரணமாக கொண்டு தடுப்பூசி பதுக்கப்படுவதற்கு வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவித்தார்.