இந்தியா

புதுச்சேரி: ஒலிம்பிக்கில் பதக்கம் வென்றவர்களுக்காக கடலுக்கு அடியில் வித்தியாச வாழ்த்து

புதுச்சேரி: ஒலிம்பிக்கில் பதக்கம் வென்றவர்களுக்காக கடலுக்கு அடியில் வித்தியாச வாழ்த்து

kaleelrahman

ஒலிம்பிக் போட்டிகளில் 7 பதக்கங்களை வென்று இந்தியாவிற்கு பெருமை சேர்த்த வீரர்களை பாராட்டும் வகையில் புதுச்சேரியை சேர்ந்த ஆழ்கடல் நீச்சல் பயிற்சியாளர்கள் 7 பேர் கடலுக்கு அடியில் தேசியக் கொடியுடன் தங்களின் வாழ்த்துகளை வித்தியாசமான முறையில் தெரிவித்துள்ளனர்.

நடந்து முடிந்த டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் இந்திய வீரர்கள் 7 பதக்கங்களை வென்று நாடு திரும்பி உள்ளனர். ஈட்டி எறிதலில் தங்கமும், குத்துச்சண்டையில் வெள்ளியும், பளு தூக்குதல், இறகுப்பந்து, ஹாக்கி உட்பட மொத்தம் 7 பதக்கங்களை இந்தியா வென்றுள்ளது. இவர்களுக்கு நாடு முழுவதும் இருந்து பாராட்டுகள் குவிந்து வருகிறது.

இந்நிலையில், புதுச்சேரியைச் சேர்ந்த ஆழ்கடல் நீச்சல் வீரர் அரவிந்த் என்பவர் தனது குழுக்களுடன் சேர்ந்து கடலுக்கு அடியில் 12 மீட்டர் ஆழத்தில் வித்தியாசமான முறையில் ஒலிம்பிக் போட்டிகளில் பதக்கம் வென்ற வீரர்களுக்கு தங்களது வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர்.

பதக்கம் வென்ற 7 பேரை பாராட்டும் வகையில் ஏழு நீச்சல் வீரர்கள் கடலின் 12 மீட்டர் ஆழத்துக்குச் சென்று ஹாக்கி மட்டை, இறகுப்பந்து பேட்டுடன், குத்துச்சண்டை, ஈட்டி எறிதல், பளு தூக்குவதுபோல் கடலுக்கடியில் நின்று இந்திய தேசியக் கொடியோடு பதக்கம் வென்ற வீரர்களுக்கு தங்களது வாழ்த்துகளை வித்தியாசமான முறையில் தெரிவித்துள்ளனர்.