சத்தீஸ்கர் மாநிலம் ஜஸ்பூர் மாவட்டத்தில் 75 வயது தாத்தாவும், 70 வயது பாட்டியும் வெகு விமர்சையாக திருமணம் செய்து கொண்டனர்.
வயதான காலத்தில் துணை இல்லாமல் தவித்து வந்த ராடியா ராமுக்கும், ஜிம்னாபாரி பாய்க்கும் காதல் மலர்ந்திருக்கிறது. இதனை அடுத்து இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்துள்ளனர். ஒட்டுமொத்த கிராமமே கோலாகலமாக இருவருக்கும் திருமணம் செய்து வைத்தது. மணமகனை தோலில் தூக்கி மணமேடைக்கு அழைத்து பாரம்பரிய முறைப்படி திருமணம் நடத்தி வைத்தனர்.