இந்தியா

அந்த பயம் இருக்கட்டும்: வாங்கிய லஞ்சத்தை திருப்பிக்கொடுக்கும் அதிகாரிகள்

Rasus


ஆந்திர மாநிலத்தில் அதிகாரிகள் தாங்கள் வாங்கிய லஞ்சத்தை வாங்கியவர்களிடையே திருப்பிக் கொடுக்கும் அதிசயம் நடந்து வருகிறது. 

அதிக லஞ்சம் நடமாடும் மாநிலங்களில் ஆந்திரா இரண்டாவது இடத்தில் உள்ளது. இதைப் களங்கத்தை போக்க, அம்மாநில முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு, புதிய திட்டம் ஒன்றை அறிமுகம் செய்துள்ளார். 'பீப்பிள் பர்ஸ்ட்' என்ற பெயரில், மக்கள் குறை தீர்க்கும் அமைப்பை உருவாக்கியுள்ளார். அதன்படி, லஞ்சம் வாங்கும் அதிகாரிகள் பற்றி 1100 என்ற தொலைபேசி எண்ணில் பொதுமக்கள் புகார் தெரிவிக்கலாம். உடனடியாக விசாரணை நடத்தப்படும். லஞ்சம் வாங்கியதை ஏற்றுக்கொண்டு அதைத் திருப்பிக்கொடுத்தால், அந்த அதிகாரி தண்டனையில் இருந்து தப்பிக்கலாம்.
இந்த திட்டத்தை அடுத்து, பயந்து போன சில அதிகாரிகள், வாங்கிய லஞ்சத்தை திருப்பிக் கொடுத்துள்ளனர். 
இந்த திட்டம் மக்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது.