ஒடிசா ரயில் விபத்து file image
இந்தியா

“ஒடிசா ரயில் விபத்து மனித தவறால் ஏற்பட்டதல்ல” - டிஆர்இயூ ஜானகிராமன்

”ஒடிசாவில் நேற்று ஏற்பட்ட ரயில் விபத்து மனித தவறால் நடந்ததல்ல என்பதே எங்கள் வாதம்” என டிஆர்இயூ ஜானகிராமன் தெரிவித்துள்ளார்.

PT WEB

ஒடிசா மாநிலம் பாலசோர் மாவட்டம் பாஹாநாகா பஜார் ரயில் நிலையம் அருகே நேற்று (ஜூன் 2) இரவு 7 மணி அளவில் 3 ரயில்கள் அடுத்தடுத்து மோதிக்கொண்ட சம்பவம் நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இந்த விபத்து எப்படி நடந்தது என்பது குறித்து இதுவரை அதிகாரப்பூர்வ தகவல்கள் எதுவும் வரவில்லை. அதேநேரம் ரயில் விபத்திற்கான காரணம் குறித்து அறியப்பட்டு வருகிறது. இந்த ரயில் விபத்தில் தற்போது வரை 288 பேர் பலியாகி இருப்பதாகவும், 900க்கும் மேற்பட்டோர் காயமடைந்திருப்பதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளன.

இந்த நிலையில், ஒடிசாவில் நேற்று ஏற்பட்ட ரயில் விபத்து மனித தவறால் நடந்ததல்ல என்பதே ரயில்வே ஊழியர் சங்கங்களின் வாதம்” எனத் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் அளித்த கருத்தைக் கேட்க இந்த வீடியோவைப் பார்க்கவும்.