இந்தியா

பழைய 500 ரூபாய் நோட்டில் இருந்து மின்சாரம்.. ஒடிசா மாணவர் கண்டுபிடிப்பு

webteam

பழைய 500 ரூபாய் நோட்டில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் முறையினை ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த 17 வயது இளைஞர் கண்டுபிடித்துள்ளார். 

பணமதிப்பிழப்பு அறிவிப்புக்குப் பின்னர் பழைய 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகளை அரசு திரும்பப் பெற்றது. மலைபோல் குவிந்த இந்த பழைய ரூபாய் நோட்டுகளை என்ன செய்வது என்று அரசு சிந்தித்துக் கொண்டிருக்கும் நிலையில், ஒடிசாவின் நௌபாடா மாவட்டத்திலுள்ள கரியார் கல்லூரியின் அறிவியல் பாடப்பிரிவு மாணவர் லச்மான் டண்டி பழைய 500 ரூபாய் நோட்டிலிருந்து மின்சாரம் தயாரிக்கும் முறையினைக் கண்டறிந்துள்ளார்.  பழைய 500 நோட்டில் உள்ள சிலிக்கான் கோட்டிங் மூலம் அவர் மின்சாரம் தயாரிக்கும் எளிய முறையினைக் கண்டுபிடித்துள்ளார். ஒரு 500 ரூபாய் நோட்டிலிருந்து 5 வோல்ட் அளவுக்கு மின்சாரம் தயாரிக்க முடியும் என்கிறார் இந்த சாதனை மாணவர். இதுதொடர்பாக விரிவான அறிக்கை அளிக்குமாறூ ஒடிசா மாநில அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையிடம் பிரதமர் அலுவலகம் கேட்டுக்கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.