இந்தியா

ஒடிசா: கொரோனாவால் வாழ்வாதாரத்தை இழந்தவர்களுக்காக 200 கோடிரூபாய் சிறப்பு தொகுப்பு

ஒடிசா: கொரோனாவால் வாழ்வாதாரத்தை இழந்தவர்களுக்காக 200 கோடிரூபாய் சிறப்பு தொகுப்பு

Veeramani

கோவிட் -19 தொற்று நோயால் பாதிக்கப்பட்ட கிராமப்புற பொருளாதாரத்தை மீட்டெடுக்க ஏழை மற்றும் மிகவும் ஏழ்மையான குடும்பங்களின் நலனுக்காக, 200 கோடி ரூபாய் சிறப்பு உதவி தொகுப்பினை வழங்க ஒடிசா முதலமைச்சர் நவீன் பட்நாயக் ஒப்புதல் அளித்துள்ளார்.

இந்த சிறப்பு தொகுப்பு மூலமாக வழங்கப்படும் கடன்களை பெண்கள், சுய உதவிக்குழுக்களின் அனைத்து உறுப்பினர்கள் அல்லது அவர்களது குடும்ப உறுப்பினர்களும் பெறலாம். வேளாண்மை மற்றும் வேளாண்மை அல்லாத துறைகளில் ஈடுபடுபவர்களால் உருவாக்கப்பட்ட தயாரிப்பாளர் மற்றும் நிறுவன குழுவுக்கு ரூ 1.5 லட்சம் வரை கடன்களை அரசாங்கம் வழங்கும் என்றும், ஆறு மாதங்கள் வரை பயனாளிகளால் இந்த தொகுப்பின் மூலமான பலன்களை பெற முடியும் என்று பஞ்சாயத்து ராஜ்ய அமைச்சர் பிரதாப் ஜெனா கூறினார்.

மாவட்ட சுய அபிவிருத்தி முகமை (டிஆர்டிஏ) இன் நேரடி மேற்பார்வையுடன் செயல்படும் பெண்கள் சுய உதவிக்குழுக்கள், சி.எல்.எஃப் மற்றும் ஜி.பி.எல்.எஃப் இல் உறுப்பினர்களாக உள்ள 60 லட்சத்துக்கும் மேற்பட்ட கிராமப்புற குடும்பங்களுக்கு இது பயன்படும் என்று கூறப்பட்டுள்ளது.