மழை, மண் எரிமலை எக்ஸ் தளம்
இந்தியா

HEADLINES |12 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை முதல் இந்தியாவின் மண் எரிமலை வெடிப்பு வரை!

இன்றைய தலைப்புச் செய்தியானது, சென்னை உள்பட 12 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை முதல் இந்தியாவின் ஒரே மண் எரிமலை மீண்டும் வெடித்தது வரை விவரிக்கிறது.

Prakash J

இன்றைய தலைப்புச் செய்தியானது, சென்னை உள்பட 12 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை முதல் இந்தியாவின் ஒரே மண் எரிமலை மீண்டும் வெடித்தது வரை விவரிக்கிறது.

  • கரூரில் நடந்த சம்பவம், மனிதர்களால் உருவாக்கப்பட்ட பேரழிவு என கூறிய நீதிமன்றம், இதை கண்மூடி வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க முடியாது எனவும் சென்னை உயர் நீதிமன்றம் காட்டமாக தெரிவித்துள்ளது.

  • கச்சத்தீவை மீட்க சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றியும், இலங்கைக்கு மத்திய அரசு அழுத்தம் கொடுக்கவே இல்லை என முதல்வர் ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.

  • சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட 12 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

  • புகழ்பெற்ற பாடகர் ஜூபீன் கார்க் மரணம் குறித்து சிபிஐ அல்லது என்ஐஏ விசாரணைக்கு உத்தரவிடக் கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

  • 20 ஆண்டுகளாக அமைதியாக இருந்த இந்தியாவின் ஒரே மண் எரிமலை மீண்டும் வெடித்துள்ளது. அந்தமான் நிகோபர் தீவுகளில் ஜார்வா க்ரீக் பகுதியில் பெரும் சத்தத்துடன் இந்தமண் எரிமலை வெடித்துள்ளது.

சென்னை உயர் நீதிமன்றம், தவெக தலைவர் விஜய்
  • காஸாவில் தங்கள் பிடியில் உள்ள அனைத்து பிணைக் கைதிகளையும் விடுவிக்க ஹமாஸ் அமைப்பினர் சம்மதம் தெரிவித்துள்ளனர்.

  • இங்கிலாந்து தேவாலயத்தின் 1,400 ஆண்டு கால வரலாற்றில், முதல் பெண் பேராயராக சாரா முல்லலி நியமிக்கப்பட்டுள்ளார்.

  • மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வலுவான நிலையில் உள்ளது. அவ்வணியைவிட இந்திய அணி 286 ரன்கள் முன்னிலையில் உள்ளது.

  • நார்வேஹலு நடைபெற்ற உலக பளுதூக்குதல் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய நட்சத்திர வீராங்கனை மீராபாய் சானு வெள்ளிப்பதக்கம் வென்றார்.

  • ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்துள்ள காந்தாரா திரைப்படத்தின் இரண்டாம் பாகம், முதல்நாளிலேயே பாக்ஸ் ஆபிஸ் வசூலை குவித்துள்ளது.