india, rain x page
இந்தியா

HEADLINES | இறுதிப்போட்டிக்கு முன்னேறிய இந்தியா முதல் 5 நாட்களுக்கு மழை வரை!

இன்றைய காலை தலைப்புச் செய்தியானது, இறுதிப்போட்டிக்கு முன்னேறிய இந்திய அணி முதல் தமிழகத்தில் 5 நாட்களுக்கு மழை குறித்த எச்சரிக்கை வரை விவரிக்கிறது.

PT WEB

இன்றைய காலை தலைப்புச் செய்தியானது, இறுதிப்போட்டிக்கு முன்னேறிய இந்திய அணி முதல் தமிழகத்தில் 5 நாட்களுக்கு மழை குறித்த எச்சரிக்கை வரை விவரிக்கிறது.

  • உச்ச நீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதியாக சூர்யகாந்த் நியமனம்.... பி.ஆர்.கவாய் ஓய்வுபெறும் நிலையில் சூர்யகாந்தை நியமித்தார் குடியரசுத் தலைவர்...

  • குழந்தைகளை மூளைச்சலவை செய்யும் நோக்கில் பிஎம் ஸ்ரீ திட்டம் வடிவமைப்பு என பிரியங்கா காந்தி விமர்சனம்...

  • 10 மற்றும் 12ஆம் வகுப்புகளுக்கான தேர்வு தேதிகளை அதிகாரப்பூர்வமாக அறிவித்தது சிபிஎஸ்இ... முழு விவரங்களை மாணவர்கள் இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம் என அறிவிப்பு..

  • அதிமுகவிலிருந்து என்னை நீக்கினால் மகிழ்ச்சிதான்... பழனிசாமியின் எச்சரிக்கைக்கு செங்கோட்டையன் பதில்...

  • பாமக உட்கட்சி பிரச்சினை 6 மாதங்களில் முடிவுக்கு வரும் என அன்புமணி நம்பிக்கை... வரும் சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணி படுதோல்வி அடையும் என்றும் விமர்சனம்...

india
  • மும்பையில் 17 குழந்தைகளைப் பிணைக்கைதியாக சிறைபிடித்த நபரால் பரபரப்பு... காவல் துறையினருடன் நடந்த சண்டையில் என்கவுன்டர்...

  • பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் இடையே நிலவி வந்த மோதலுக்கு முற்றுப்புள்ளி... துருக்கியில் நடந்த பேச்சுவார்த்தையில் சண்டை நிறுத்தத்திற்கு இருநாடுகளும் சம்மதம்...

  • செஸ் கிராண்ட்மாஸ்டரானார் தமிழ்நாட்டைச் சேர்ந்த 16 வயதான இளம்பரிதி.... தமிழ்நாட்டு சாம்பியன்களின் மணிமகுடத்தில் மேலும் ஒரு வைரக்கல் என முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து...

  • இந்தியா, ஆஸ்திரேலியா மோதும் 2ஆவது இருபது ஓவர் கிரிக்கெட் போட்டி... முதல் போட்டி ரத்தான நிலையில், மெல்போர்னில் இன்று நடக்கும் ஆட்டத்தை வெற்றியுடன் தொடங்க இரு அணிகளும் தீவிரம்...

  • மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி, இறுதிப் போட்டிக்கு முன்னேறியது இந்திய அணி.