தோனி, மழை எக்ஸ் தளம்
இந்தியா

HEADLINES |கிரிக்கெட் மைதானத்தை திறந்துவைத்த தோனி முதல் கனமழை எச்சரிக்கை வரை!

இன்றைய காலை தலைப்புச் செய்தியானது, 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு முதல் பிரம்மாண்ட கிரிக்கெட் மைதானத்தை திறந்துவைத்த தோனி வரை விவரிக்கிறது.

PT WEB

இன்றைய காலை தலைப்புச் செய்தியானது, 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு முதல் பிரம்மாண்ட கிரிக்கெட் மைதானத்தை திறந்துவைத்த தோனி வரை விவரிக்கிறது.

  • தமிழகத்தில் கோவை, ஈரோடு உள்ளிட்ட 10 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு... நீலகிரிக்கு மிக கனமழை எச்சரிக்கை விடுத்தது வானிலை ஆய்வு மையம்...

  • மதுரையில் வேலம்மாள் குழுமம் சார்பாகக் கட்டப்பட்டுள்ள பிரம்மாண்ட கிரிக்கெட் மைதானத்தை இந்திய ஜாம்பவான் எம்.எஸ்.தோனி திறந்துவைத்தார்.

  • காஸா அமைதி திட்டத்திற்காக வாழ்த்து தெரிவித்ததுடன், இந்தியா துணையாக இருக்கும் என பிரதமர் மோடி உறுதியளித்துள்ளார்.

  • அமைதிக்கான நோபல் பரிசு இன்று அறிவிக்கப்படும் நிலையில், அமெரிக்க அதிபர் ட்ரம்பிற்கு அதனை வழங்க வேண்டுமென இஸ்ரேல் பிரதமர் நெதன்யாஹூ வலியுறுத்தியுள்ளார்.

  • இந்தியாவில், நச்சுத்தன்மை வாய்ந்த இருமல் மருந்தைக் குடித்ததால17 குழந்தைகள் உயிரிழந்த சம்பவத்தைத் தொடர்ந்து, நாட்டில் விற்கப்படும் மருந்துகளின் தரச் சோதனையில் ஒழுங்குமுறைக் குறைபாடு இருப்பதாக உலக சுகாதார நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது.

cough syrup
  • உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி மீது காலணி வீச முயன்ற ராகேஷ் கிஷோர், வழக்கறிஞர்கள் சங்கத்திலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.

  • மகளிர் ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் லீக் சுற்றில், தென்னாப்பிரிக்காவிடம் இந்திய அணி தோல்வியடைந்தது.

  • உலக ஜூனியர் பேட்மிண்டன் சாம்பியன்ஷிப்பில் கலப்பு அணிகள் பிரிவில், இந்தியா முதல்முறையாக பதக்கத்தை உறுதி செய்துள்ளது.

  • இஸ்ரேல் - ஹமாஸ் இடையிலான முதற்கட்ட போர் நிறுத்த ஒப்பந்தம் அறிவிக்கப்பட்டபோதிலும், காஸாவில் தாக்குதல் தொடர்ந்து நடைபெறுகிறது.

  • அமெரிக்க அதிபர் மாளிகையின் வலைத்தள பக்கத்தில் ட்ரம்ப்பின் படத்தை போட்டு THE PEACE PRESIDENT என்ற வாசகம் இடம்பெற்றுள்ளது கவனத்தை ஈர்ப்பதாக உள்ளது.