october 01 2025 morning headlines news web
இந்தியா

HEADLINES | கரூர் துயரம் குறித்து விஜய் வீடியோ வெளியீடு முதல் வன்கொடுமை வழக்கில் காவலர்கள் கைது வரை!

இன்றைய தலைப்புச் செய்தியானது, கரூர் துயரம் குறித்து விஜய் வீடியோ வெளியீடு முதல் வன்கொடுமை வழக்கில் காவலர்கள் கைது வரை விவரிக்கிறது.

PT WEB

புதிய தலைமுறை இணையதளம் நாள்தோறும் அன்றைய தலைப்புச் செய்திகள் குறித்து இருவரிகளில் பதிவு செய்து வருகிறது. அந்த வகையில், இன்றைய நாளுக்கான செய்திகளை இங்கே தெரிந்துகொள்ளலாம்..

  • கரூர் துயர சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களை சந்திக்காமல் சென்னை திரும்பியது ஏன்? பதற்றமான சூழலைத் தவிர்க்கவே புறப்பட்டதாக வீடியோவில் விஜய் விளக்கம்...

  • 5 மாவட்டங்களில் நடக்காத பிரச்சினை கரூரில் மட்டும் நடந்தது ஏன்? விரைவில் அனைத்து உண்மைகளும் வெளிவரும் என தவெக தலைவர் விஜய் பேச்சு...

  • சிஎம் சார், பழிவாங்க வேண்டுமென்ற எண்ணம் இருந்தால் என்னை என்ன வேண்டுமானாலும் செய்யுங்கள்... தொண்டர்கள் மீது கை வைக்க வேண்டாம் என விஜய் பேச்சு...

  • கூட்ட நெரிசலில் பாதிக்கப்பட்டவர்களை விரைவில் சந்திப்பேன்... தமிழக வெற்றிக் கழகத்தின் அரசியல் பயணம் இன்னும் வலிமையோடு தொடரும் என விஜய் பேச்சு...

  • கரூர் துயரம் நடந்தது எப்படி என வீடியோ வெளியிட்டது தமிழக அரசு... தவெகவினரின் ஒவ்வொரு புகாருக்கும் ஆதாரத்துடன் மறுப்பு...

கரூர் தவெக பரப்புரை
  • கரூரில் தவெக அனுமதி கேட்ட இரண்டு இடங்களும் வேலுச்சாமிபுரத்தைவிட குறுகலானவை... வழக்கமான கூட்டங்களைவிட விஜய் பரப்புரைக்கு கூடுதல் பாதுகாப்பு வழங்கப்பட்டதாக அரசு செய்தி தொடர்பாளர் அமுதா விளக்கம்...

  • விஜய் பேசும்போது மின்தடை ஏற்படவில்லை; தொண்டர்கள் ஜெனரேட்டர் அறைக்குள் புகுந்த பிறகே குறிப்பிட்ட பகுதியில் மட்டும் மின்சாரம் துண்டிப்பு... போலீஸார் தடியடி நடத்தவில்லை என்றும் அரசுத் தரப்பு ஆதாரத்துடன் விளக்கம்...

  • திருச்சி, நாகை, நாமக்கல் உட்பட விஜயின் எல்லா பரப்புரைகளிலும் தொண்டர்கள் பலர் காயமடைந்தனர்... கரூரில் மட்டும் ஏன் இப்படி நடந்தது என்ற விஜய் கேள்விக்கு அரசுத் தரப்பு பதில்....

  • தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் இருக்கையில் அரசு செயலர் பேட்டி ஏன்? முன்பே தீர்ப்பை எழுதிவிட்டுத்தான் விசாரணையை ஆரம்பித்தீர்களா என்றும் பழனிசாமி விமர்சனம்...

  • கரூர் துயர சம்பவத்திலிருந்து அரசியல் லாபம் பெற துடியாய் துடிக்கிறார் பழனிசாமி... செய்தியாளர் சந்திப்பில் உண்மைகள் வெளிவருவதை தாங்க முடியாமல் தத்தளிப்பதாக அமைச்சர் தங்கம் தென்னரசு பதிலடி...

கரூர் தவெக பரப்புரை
  • கூட்ட நெரிசல் துயரம் நடந்த கரூர் வேலுச்சாமிபுரத்தில் பாஜக எம்பிக்கள் குழு ஆய்வு... பிரபல நடிகரான விஜய்க்கு குறுகிய இடம் கொடுத்தது சரியில்லை என ஹேமமாலினி குற்றச்சாட்டு...

  • கரூரில் வேலுச்சாமிபுரத்தில் காங்கிரஸ் தேசிய பொதுச்செயலர் கே.சி. வேணுகோபால் ஆய்வு... கூட்ட நெரிசல் சம்பவத்தில் அரசியல் செய்ய விரும்பவில்லை என பேட்டி...

  • தவெக நிர்வாகி ஆதவ் அர்ஜுனா மீது வழக்குப்பதிவு... புரட்சி செய்ய வேண்டும் என்ற எக்ஸ் தள பதிவு சர்ச்சையான நிலையில் காவல் துறை நடவடிக்கை...

  • கரூர் நெரிசல் வழக்கில் கைது செய்யப்பட்ட தவெக நிர்வாகிகள் இருவருக்கு 15 நாள் நீதிமன்றக் காவல்... 14ஆம் தேதி வரை சிறையில் அடைக்க மாவட்ட குற்றவியல் நீதிமன்றம் உத்தரவு...

  • கரூர் லைட்ஹவுஸ் பகுதியில் பாலம் இருப்பதால் விஜய் பரப்புரைக்கு அனுமதி தரவில்லை என தவெக வழக்கில் காவல்துறை வாதம்... தவெகவினர் நேரத்தை கடைபிடிக்கவில்லை என்றும் கரூர் நீதிமன்றத்தில் காவல் துறை தரப்பு குற்றச்சாட்டு...

விஜய் பரப்புரை கரூர்
  • வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்வு... 16 ரூபாய் அதிகரித்து 1754 ரூபாய்க்கு விற்பனை...

  • மத்திய வங்கக்கடல் பகுதியில் இன்று காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும் என தகவல்... பல்வேறு மாவட்டங்களில் வரும் 4ஆம் தேதி வரை கனமழைக்கு வாய்ப்பு...

  • வரும் 3ஆம் தேதி பொது விடுமுறை என வெளியாகும் தகவல் வதந்தி... தமிழக அரசின் தகவல் சரிபார்ப்பகம் அறிவிப்பு...

  • ஒன்றரை லட்சம் ஆசிரியர்களை பாதிக்கும் ஆசிரியர் தகுதித் தேர்வு உத்தரவு... உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புக்கு எதிராக சீராய்வு மனு தாக்கல் செய்தது தமிழ்நாடு அரசு...

  • சென்னை எண்ணூர் அனல்மின் நிலையத்தில் ஏற்பட்ட விபத்தில் வடமாநில தொழிலாளர்கள் 9 பேர் உயிரிழப்பு... தலா 10 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு....

பாலியல் வன்கொடுமை
  • திருவண்ணாமலையில் இளம்பெண் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட விவகாரத்தில் காவலர்கள் இருவர் கைது... விசாரணைக்கு அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்த புகாரில் நடவடிக்கை...

  • குலசேகரன்பட்டினம் தசரா திருவிழாவை முன்னிட்டு பல்வேறு வேடங்களை அணிந்து மேளதாளங்கள் முழங்க பக்தர்கள் நடனம்... விழாவைக் காண வெளிநாட்டவர்களும் வருகையால் விழா கோலம் பூண்டுள்ள குலசை நகரம்...

  • திருப்பதி ஏழுமலையான் கோயில் பிரம்மோற்சவத்தின் ஏழாவது நாள் விழா... சந்திர பிரபை வாகனத்தில் நவநீதகிருஷ்ணர் அலங்காரத்தில் மலையப்ப சுவாமி எழுந்தருளினார்....

  • லடாக் மாநில அந்தஸ்து தொடர்பான பேச்சுவார்த்தையில் தொடரும் பின்னடைவு... அரசுடனான பேச்சுவார்த்தையிலிருந்து விலகுவதாக கார்கில் ஜனநாயக கூட்டணி என்ற அமைப்பும் அறிவிப்பு...

  • லடாக் மக்களுக்கு பிரதமர் மோடி துரோகம் இழைத்துவிட்டார்... மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் விமர்சனம்...

இஸ்ரேல் காசா போர், டொனால்ட் டிரம்ப்
  • காஸா போர் நிறுத்தத்துக்கான ட்ரம்பின் விரிவான திட்டத்தை ஏற்காத ஹமாஸ் அமைப்பு... தொடரும் குழப்பத்தால் காஸாவில் அமைதி திரும்புவதில் நீடிக்கும் சிக்கல்...

  • காஸா அமைதி ஒப்பந்தம் தொடர்பாக 4 நாட்களில் பதிலளிக்க வேண்டும்... ஹமாஸ் அமைப்புக்கு அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கெடு...

  • அமெரிக்க அதிபர் ட்ரம்ப்க்கு 217 கோடி ரூபாய் நஷ்ட ஈடு வழங்கும் யூடியூப்... ட்ரம்பின் சமூக வலைதள கணக்குகளை முடக்கி வைத்திருந்த வழக்கில் சமரசம்...

  • நாடெங்கும் களைகட்டும் பண்டிகைக்கால ஆன்லைன் ஷாப்பிங் விற்பனை... அமேசான், ஃப்ளிப்கார்ட் ஆகிய தளங்களில் முதல் வார சிறப்பு விற்பனை 29% அதிகரித்து 60 ஆயிரத்து 700 கோடியை தொட்டது...

  • மகளிர் ஒருநாள் உலக கோப்பை கிரிக்கெட் தொடரை வெற்றியுடன் தொடங்கிய இந்தியா... முதல் ஆட்டத்தில் இலங்கையை 59 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அசத்தல்...