திபெத்திய ஆன்மிகத் தலைவரான தலாய் லாமாவை, முன்னாள் அமெரிக்க அதிபர் ஒபாமா சந்தித்துள்ளார்.
டெல்லியில் ஆங்கில ஊடகமான நடத்திய தலைமையாளர்கள் கருத்தரங்கில் அமெரிக்க முன்னாள் அதிபர் பராக் ஒபாமா பங்கேற்றார். அப்போது பேசிய அவர், முஸ்லீம்களை இந்தியா பாதுகாக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார். பின்னர் டெல்லியில் உள்ள பிரதமர் அலுவலகத்திற்கு சென்ற ஒபாமா, அங்கு பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்தார். இதுதொடர்பாக ட்விட்டரில் பதிவிட்ட மோடி, அதிபர் ஒபாமாவை மீண்டும் ஒருமுறை சந்தித்தது மகிழ்ச்சி என்று தெரிவித்தார்.
இதைத் தொடர்ந்து காங்கிரஸ் கட்சியின் துணைத்தலைவர் ராகுல் காந்தியை, சந்தித்து பேசினார். அது குறித்த புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் ராகுல் வெளியிட்டுள்ளார். இந்நிலையில் ஆன்மிகத் தலைவரான தலாய் லாமாவையும், டெல்லியில் ஒபாமா சந்தித்து பேசியுள்ளார்.