அகில பாரதிய இந்து மகாசபா அமைப்பினர் பிரதமர் மோடிக்கு ரத்தத்தில் கடிதம் எழுதியுள்ளனர். எஸ்.சி., எஸ்.டி வன்கொடுமை சட்டம் தொடர்பான மறுசீராய்வு மனுவை மத்திய அரசு திரும்பப் பெற வலியுறுத்தி இந்தக் கடிதம் அளிக்கப்பட்டுள்ளது.
எஸ்.சி., எஸ்.டி வன்கொடுமை தடுப்புச் சட்டம் தொடர்பாக உச்சநீதிமன்றம் சமீபத்தில் அளித்த தீர்ப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு தழுவிய பந்த் நடைபெற்ற நிலையில் இந்தக் கடிதம் பிரதமருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. தங்கள் கோரிக்கையை அரசு ஏற்கவில்லை என்றால் டெல்லி ராம்லீலா மைதானத்தில் கூட்டமாக மொட்டை அடித்து எதிர்ப்பை வெளிப்படுத்தப்படும் என்று அவர்கள் மிரட்டல் விடுத்துள்ளனர்.
முன்னதாக கடந்த ஏப்ரல் 5ம் தேதி பாரதிய தலித் பந்தர்ஸ் கட்சியைச் சேர்ந்த உறுப்பினர்கள், பிரதமர் மோடிக்கும், குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்துக்கும் ரத்தத்தில் கடிதம் எழுதியிருந்தனர். உச்சநீதிமன்றம் தீர்ப்பால் எஸ்.சி., எஸ்.டி வன்கொடுமை தடுப்புச் சட்டம் நீர்த்துப் போவதாக கூறி அவர்கள் அந்தக் கடிதத்தை எழுதினர்.