புதிய தலைமுறை இணையதளம் நாள்தோறும் அன்றைய தலைப்புச் செய்திகள் குறித்து இருவரிகளில் பதிவு செய்து வருகிறது. அந்த வகையில், இன்றைய நாளுக்கான செய்திகளை இங்கே தெரிந்து கொள்ளலாம்..
இஸ்ரேல், ஹமாஸ் இடையே இன்று கையெழுத்தாகிறது காஸா அமைதி ஒப்பந்தம்... எகிப்தில் நடக்கும் மாநாட்டில் ட்ரம்ப் உள்ளிட்ட 20 நாட்டு தலைவர்கள் பங்கேற்க உள்ளதாக தகவல்..
வரலாற்று முக்கியத்துவம் மிக்க காஸா அமைதி ஒப்பந்த நிகழ்வில் பங்கேற்க பிரதமர் மோடிக்கும் அழைப்பு... பிரதமர் சார்பில் மத்திய அமைச்சர் கீர்த்திவர்த்தன் சிங் பங்கேற்கவிருப்பதாக அறிவிப்பு...
முடிவுக்கு வரும் காஸாவின் கண்ணீர் கதை... அமைதி ஒப்பந்தம் கையெழுத்தாகும் நிலையில் தாயகம் திரும்பும் பாலஸ்தீன மக்கள்...
பிஹார் தேர்தலுக்கான தொகுதிப் பங்கீட்டை இறுதி செய்தது தேசிய ஜனநாயக கூட்டணி... பாஜகவும், ஐக்கிய ஜனதா தளமும் தலா 101 தொகுதிகளில் போட்டி...
டெல்லியில் முகாமிட்டுள்ள ஆர்ஜேடி தலைவர்கள்... இந்தியா கூட்டணியில் தொகுதிப் பங்கீடு தொடர்பாக இறுதி முடிவு எடுக்கப்படும் என தகவல்...
பிஹார் சட்டப்பேரவை தேர்தலில் இண்டியா கூட்டணிக்கு புதிய சிக்கல்... போட்டியாக வேட்பாளர்களை நிறுத்தும் அஸாதுதின் ஓவைசி தலைமையிலான ஏஐஎம்ஐஎம் கட்சி...
கரூர் துயரச் சம்பவம் குறித்து சிபிஐ விசாரணை கோரிய வழக்கு... தவெக தொடர்ந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்குகிறது உச்ச நீதிமன்றம்...
கைது செய்யப்பட்ட தவெக திண்டுக்கல் மாவட்டச் செயலர் நிர்மல் குமார் சிறையில் அடைப்பு... நீதிபதி குறித்து சமூக வலைதளங்களில் அவதூறாக பதிவிட்டதாக நடவடிக்கை...
எம்ஜிஆர் போல் மக்களின் தொண்டனாக உருவெடுக்க விஜய் விருப்பம்... விஜயின் தந்தை எஸ்ஏ சந்திரசேகர் பேச்சு...
திமுக ஆட்சியை அகற்றுவதற்கான முகூர்த்தநாள் குறிக்கப்பட்டுவிட்டது... தமிழகம் தலை நிமிர தமிழனின் பயணத்தின் தொடக்க நிகழ்ச்சியில் பேச்சு...
திமுக கூட்டணியில் விரிசல் தொடங்கிவிட்டது என அதிமுக பொதுச்செயலர் பழனிசாமி கருத்து... தவெகவினர் தாங்களாகவே விருப்பப்பட்டு தங்களுக்கு வரவேற்பு அளிப்பதாக பேட்டி...
தவெகவுக்கு ஆதரவாக பேசினால் அக்கட்சி கூட்டணிக்கு வந்துவிடும் என கனவு காண்கிறார் பழனிசாமி... கூட்டணி தொடர்பாக டிசம்பரில் அறிவிக்கப்படும் என அமமுக பொதுச்செயலர் தினகரன் பேட்டி...
சென்னையில் வழக்கறிஞர் மீது விசிகவினர் தாக்குதல் நடத்திய விவகாரம்... திருமாவளவன் தேவையின்றி தன்னை வம்புக்கு இழுத்துள்ளதாக அண்ணாமலை குற்றச்சாட்டு...
தென்காசி, சங்கரன்கோவில், சிவகங்கை உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக மழை... நீலகிரியில் பெய்த மழையால் குளிர்ச்சியான சூழல் நிலவியதால் சுற்றுலா பயணிகள் உற்சாகம்...
தேனி மாவட்டத்தின் பெரும்பாலான இடங்களில் நேற்றிரவு கனமழை... சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்தது... தீபாவளி பொருட்கள் வாங்க வந்தவர்கள் அவதி...
தமிழ்நாட்டில் இன்று 11 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு... கோவை, திருச்சி, நெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை மையம் கணிப்பு...
தீபாவளிக்கு ஒரு வாரமே உள்ள நிலையில் கடைவீதிகளில் அலைமோதிய கூட்டம்... புத்தாடைகள், பட்டாசுகள், வீட்டு உபயோக பொருட்களை ஆர்வத்துடன் வாங்கி சென்ற மக்கள்...
தீபாவளி பண்டிகைக்கான பொருட்கள் வாங்க சென்னை தி.நகரில் குவிந்த மக்கள்... பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிசெய்ய சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக காவல் துறை விளக்கம்...
திருப்பூர் ரயில் நிலையத்தில் குவிந்த வடமாநில தொழிலாளர்கள்... தீபாவளி பண்டிகையை கொண்டாட சொந்த ஊர்களுக்கு படையெடுப்பு...
ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்... தனியார் ஆம்னி பேருந்து உரிமையாளர்களுக்கு அமைச்சர் சிவசங்கர் எச்சரிக்கை...
மகளிர் உலகக்கோப்பை போட்டியில் ஆஸ்திரேலியாவிற்கு எதிராக இந்தியா தோல்வி.. இந்தியா நிர்ணயித்த 331 ரன்கள் இலக்கை சேஸ்செய்து வரலாறு படைத்தது ஆஸ்திரேலியா..