பாகிஸ்தானில் அரிய வகை கனிமச் சுரங்கங்களில் முதலீடு செய்வது குறித்து அமெரிக்க குழு பேச்சுவார்த்தை... சீனா கட்டுப்பாடுகள் விதிக்கும் நிலையில் பாகிஸ்தான் பக்கம் பார்வையை திருப்பிய அமெரிக்கா...
எந்த நாடு பேரிடரால் அவதிப்பட்டாலும் முதலில் சென்று உதவும் தேசம் இந்தியா... சட்டீஸ்கர் மாநிலத்தில் புதிய சட்டப்பேரவை கட்டடத்தை திறந்துவைத்து பிரதமர் மோடி பேச்சு...
பிஹார் மாநிலத்தில் தேர்தல் பரப்புரையை தொடங்கினார் பிரியங்கா காந்தி... இத்தனை ஆண்டுகளாக தராதவர்கள் இனிதான் தரப்போகிறார்களா என ஒரு கோடி வேலைகள் வாக்குறுதி குறித்து கேள்வி...
போராடாவிட்டால் நமக்குச் சொந்தமான நிலம் மட்டுமல்ல வாக்குரிமையே கூட பறிபோய்விடும்... எல்லைப் போராட்டத் தியாகிகள் வழியில் தமிழ்நாடு போராடும், தமிழ்நாடு வெல்லும் என முதல்வர்பதிவு...
வரும் 5ஆம் தேதி எடப்பாடி கே. பழனிசாமி தலைமையில் அதிமுக மாவட்டச் செயலர்கள் கூட்டம்... கட்சியிலிருந்து செங்கோட்டையன் நீக்கப்பட்ட நிலையில், முக்கிய ஆலோசனை....
பொதுச்செயலராக எடப்பாடி பழனிசாமி பொறுப்பேற்ற பிறகு தேர்தல்களில் அதிமுகவுக்கு பின்னடைவுதான்... சர்வாதிகாரப்போக்குடன் பழனிசாமி செயல்பட்டு வருவதாகவும் செங்கோட்டையன் குற்றச்சாட்டு...
செங்கோட்டையன் கடந்த 6 மாதங்களாக அதிமுகவுக்கு எதிராக இருந்ததாக எடப்பாடி கே.பழனிசாமி குற்றச்சாட்டு... கட்சியில் இருந்து நீக்கப்பட்டோருடன் இணைந்து செயல்பட்டதால் நடவடிக்கை என விளக்கம்...
திமுகவின் பி டீமாகவே செங்கோட்டையன் செயல்பட்டு வருவதாக பழனிசாமி விமர்சனம்... அவர் குறிப்பிடுபவர்கள் எல்லாம் அதிமுகவில் இருந்து பிரிந்து சென்றவர்கள் அல்ல, நீக்கப்பட்டவர்கள் என விளக்கம்...
செங்கோட்டையனை நீக்கும் அளவிற்கு பழனிசாமிக்கு தகுதி இல்லை என்றும், தானே அவர் அழிவை தேடிக்கொள்வதாகவும் தினகரன்விமர்சனம்...இப்போது இருப்பது ADMK அல்ல; EDMKஎன்றும் கருத்து...
திமுக அரசுக்கு கவுன்ட்டவுன் தொடங்கிவிட்டது... 140 நாட்கள்தான் திமுக ஆட்சியில் இருக்கும் என நயினார் நாகேந்திரன் பேட்டி...
வாக்காளர் பட்டியல் சிறப்புத் திருத்தம் குறித்து தமிழக அரசு நடத்துவது அனைத்துக் கட்சி கூட்டமல்ல; திமுக கூட்டணி கட்சிகளின் கூட்டம்... பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் விமர்சனம்....
மக்கள் சக்தி துணையுடன் தமிழ்நாட்டை மீட்போம்... தமிழ்நாடு நாள் விழாவுக்கு வாழ்த்து தெரிவித்து எக்ஸ் தளத்தில் தவெக தலைவர் விஜய் பதிவு....
அரசியல் கட்சித் தலைவர்களின் சாலை வலத்துக்கு நிபந்தனைகளுடன் அனுமதி என தகவல்... முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில்நடந்த ஆலோசனைக் கூட்டத்தில்முடிவு....
தெரு நாய் விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு பிரமாண பத்திரம் தாக்கல்... நாய் பிடிப்பவர்கள் 450 பேருக்கு உரிய பயிற்சி வழங்கப்பட்டுள்ளதாக விளக்கம்...
அடுத்த 24 மணி நேரத்தில் வங்கக் கடலில் உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி.... தமிழ்நாட்டில் 7ஆம் தேதி வரை மழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் கணிப்பு...
சென்னையில் ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.80 உயர்ந்து ரூ.90,480 க்கு விற்பனை... ஒரு கிராம் தங்கம் ரூ.10 விலை உயர்ந்து ரூ.11,310க்கு விற்பனையாகிறது...
தமிழ்ப் பேரரசர் ராஜராஜ சோழனின் 1040ஆவது சதயவிழா கொண்டாட்டம்... அரசு சார்பில் ராஜராஜனின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை...
எர்ணாகுளம், பெங்களூரு இடைய வந்தே பாரத் ரயில் இயக்குவதற்கு ரயில்வே வாரியம் ஒப்புதல்... சேலம், ஈரோடு, திருப்பூர், கோவை ஆகிய 4 ரயில் நிலையங்களில் நின்று செல்லும் என அறிவிப்பு...
அமெரிக்காவில் 52ஆவது ஆண்டாக ஹாலோவீன் அணிவகுப்பு நிகழ்ச்சி... பிசாசு, எலும்புக்கூடு என விதவிதமான வேடங்களில் ஏராளமானோர் பங்கேற்பு...
உலகக் கோப்பையை வென்றால் இந்திய மகளிர் அணிக்கு 125 கோடி பரிசுத் தொகை வழங்க பிசிசிஐ திட்டம்.... நாளை நடைபெறும் இறுதிப்போட்டிக்கு எகிறும் எதிர்பார்ப்பு....