இந்தியா

வெளிநாடு தப்பாமல் தடுக்கவே கார்த்தி சிதம்பரத்திற்கு நோட்டீஸ்: உள்துறை அமைச்சகம்

வெளிநாடு தப்பாமல் தடுக்கவே கார்த்தி சிதம்பரத்திற்கு நோட்டீஸ்: உள்துறை அமைச்சகம்

webteam

விஜய் மல்லையாவை போல வெளிநாடு தப்பிச் சென்று விடாமல் தடுக்கவே கார்த்தி சிதம்பரத்துக்கு லுக்அவுட் நோட்டீஸ் தரப்பட்டுள்ளதாக மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

நிதி மோசடி தொடர்பான வழக்குகளை சந்தித்து வரும் கார்த்தி சிதம்பரம் வெளிநாடு செல்லும்போது கண்காணிக்க லுக்அவுட் நோட்டீசை மத்திய உள்துறை அமைச்சகம் பிறப்பித்துள்ளது. அதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் கார்த்தி சிதம்பரம் தொடர்ந்த வழக்கில் இன்று விசாரணை நடைபெற்றது. அப்போது வாதிட்ட அரசுத் தரப்பு வழக்கறிஞர், விஜய் மல்லையாவைப் போல கார்த்தி சிதம்பரமும் வெளிநாடு தப்பாமல் தடுக்கவே லுக்அவுட் நோட்டீஸ் வழங்கப்பட்டதாகத் தெரிவித்தார்.

மல்லையாவோடு ஒப்பிட்டுப் பேசியதற்கு கார்த்தி சிதம்பரம் தரப்பு வழக்கறிஞர் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். 2 முறை நோட்டீஸ் அனுப்பியும் நேரில் ஆஜராகாத கார்த்தி சிதம்பரம், லுக்அவுட் நோட்டீசை எதிர்ப்பது ஏன் என்றும் அரசுத் தரப்பில் கேள்வி எழுப்பப்பட்டது.