குடியரசு தலைவர் பதவிக்கான போட்டியில் தான் இல்லை என ஆர் எஸ் எஸ் தலைவர் மோகன் பகவத் தெரிவித்துள்ளார்.
தன்னுடைய பெயர் குடியரசு தலைவர் பதவிக்கான போட்டியில் பரிந்துரைக்கப்பட்டால் கூட அதை ஏற்க மாட்டேன் எனவும் மோகன் பகவத் கூறியுள்ளார். குடியரசு தலைவர் பதவிக்கு மோகன் பகவத் சரியான தேர்வாக இருப்பார் என சிவசேனா எம்பி சஞ்சய் ரவுத் தெரிவித்திருந்தார். இந்த சூழலில் மோகன் பகவத் அது குறித்து விளக்கமளித்துள்ளார். வரும் ஜூலை மாதத்துடன் பிரணாப் முகர்ஜியின் பதவிக்காலம் முடிய இருக்கும் சூழலில், அடுத்த குடியரசு தலைவராக யார் தேர்வாக போகிறார் என்ற எதிர்ப்பார்ப்பு நிலவுகிறது.