இந்தியா

பெண்களை அனுமதிக்க முடியாது: சபரிமலை தேவாஸ்தானம் திட்டவட்டம்

பெண்களை அனுமதிக்க முடியாது: சபரிமலை தேவாஸ்தானம் திட்டவட்டம்

webteam

சபரிமலை ஐயப்பன் கோயிலில் 10 முதல் 50 வயதுக்கு உட்பட்ட பெண்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என தேவஸ்தான வாரியம் உறுதிபட தெரிவித்துள்ளது. திருவனந்தபுரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய தேவஸ்தான வாரியத் தலைவர் பிரயார் கோபாலகிருஷ்ணன் பாரம்பரியம், சம்பிரதாயம் ஆகியவற்றை யாரும் மீற அனுமதிக்க முடியாது என்றார்.

முன்னதாக சபரிமலை ஐயப்பன் கோயிலில் பெண்களை அனுமதிக்கும் பிரச்னை தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதாகவும், வழக்கு முடிவுக்கு வரும் வரையில் காலங்காலமாக கடைப்பிடிக்கப்பட்டு வரும் பாரம்பரியத்திலும், விதிமுறைகளிலும் எந்தவித மாற்றமும் இல்லை என்றும் கேரள அமைச்சர் சுரேந்திரன் கூறியிருந்தார். இந்நிலையில் அமைச்சரின் கருத்தை முற்றிலும் ஆதரிப்பதாக கோபாலகிருஷ்ணன் கூறியுள்ளார்.