இந்தியா

44 விதிமீறல் சம்பவங்கள்: சென்டினல் தீவுக்கு செல்ல மீண்டும் தடை?

webteam

அந்தமான் பகுதியில் உள்ள வடக்கு சென்டினல் தீவுக்கு செல்வதற்கு மீண்டும் தடைவிதிக்க மத்திய அரசு முயற்சித்து வருகிறது.

அந்தமான் பகுதியில் வடக்கு சென்டினல் தீவில் பழங்குடியினர் வசித்து வருகின்றனர். இவர்கள் வெளியில் இருந்து தீவுக்கு வரும் ஆட்களை ஏற்க மறுக்கின்றனர். அவர்களை தாக்கவும் செய்கின்றனர். அப்படி அங்கு சென்ற சிலரை அவர்கள் கொன்றும் உள்ளனர். சமீபத்தில் அங்கு சென்ற ஜான் ஆலன் சாவ் என்ற அமெரிக்க இளைஞரும் கொல்லப்பட்டார். 

இந்தத் தீவை தடை செய்யப்பட்ட மற்றும் பாதுகாக்கப்பட்ட பகுதியாக மத்திய அரசு அறிவித்திருந்தது. கடந்த ஆகஸ்ட் மாதம்தான் தடையை மத்திய அரசு நீக்கியது. அதன்பிறகு, அந்தமானுக்கு வந்த வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் அனுமதி இன்றி, விதிமுறைகளை மீறி அந்த பகுதிக் கு சென்று உள்ளனர். இதுபோன்ற 44 விதிமீறல் சம்பவங்கள் நடந்ததாகத் தெரியவந்துள்ளது. இது தொடர்பான அறிக்கையை அந்தமான் நிகோபார் நிர்வாகம் மத்திய அரசுக்கு அனுப்பி வைத்துள்ளது.

இதையடுத்து அந்த தீவுக்கு வெளியாட்கள் செல்ல மீண்டும் தடை விதிக்கப்படலாம் என்றும் விரைவில் அது தொடர்பான அறிவிப்பு வெளிவர லாம் எனவும் செய்திகள் வெளியாகியுள்ளது.