மானியமில்லாத சிலிண்டரின் விலை ரூ.100.50 காசு குறைக்கப்பட்டுள்ளதாக இந்தியன் ஆயில் நிறுவனம் அறிவிக்கை வெளியிட்டுள்ளது.
இந்தியாவில் மானிய விலை சிலிண்டர் மற்றும் மானியமில்லாத் சிலிண்டர் என இருவகையில் சமையல் எரிவாயு சிலிண்டர்கள் விற்பனை செய்யப்படுகின்றன. இவற்றின் விலையை எரிவாயு நிறுவனங்களே முடிவு செய்கின்றனர். அதன்படி மானியமில்லாத் சிலிண்டரின் விலை இன்று நள்ளிரவு முதல் ரூ.100.50 காசு குறைக்கப்படுவதாக இந்தியன் ஆயில் நிறுவனம் தெரிவித்துள்ளது. அதன்படி, இன்று வரை ரூ.737.50 ஆக விற்கப்பட்டு வந்த மானியமில்லாத சிலிண்டர் நாளை முதல் ரூ.637 ஆக விற்பனை செய்யப்படும்.
மானிய விலை சிலிண்டரின் விலையில் குறிப்பிடத்தகுந்த வகையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. இன்று வரை ரூ.497.37 ஆக விற்கப்பட்ட மானிய விலை சிலிண்டர் நாளை முதல் ரூ.494.35 ஆக விற்கப்படும். சர்வதேச சந்தையில் ஏற்பட்ட விலை மாற்றம் காரணமாக இந்த விலை குறைவு செய்யப்பட்டிருப்பதாகவும் எரிவாயு நிறுவனங்கள் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.