இந்தியா

மானியமற்ற சிலிண்டர் விலை ரூ.62.50 குறைப்பு

மானியமற்ற சிலிண்டர் விலை ரூ.62.50 குறைப்பு

webteam

மானியம் இல்லாத சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 62 ரூபாய் 50 காசுகள் குறைக்கப்பட்டுள்ளது. 

சென்னையில், 14.2 கிலோ எடை கொண்ட மானியம் இல்லாத சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 62 ரூபாய் 50 காசுகள் குறைக்கப்பட்டு, 590 ரூபாய் 50 காசாக நிர்ணயம் செய்யப்பட்டு, இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. 

மானியமற்ற சிலிண்டரின் விலை கடந்த மாதம் 100 ரூபாய் 50 காசுகள் குறைக்கப்பட்டிருந்தது. இரண்டு மாதங்களில் மானியமற்ற சிலிண்டரின் விலை 163 ரூபாய் குறைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், ‌இந்தி யன் ஆயில் நிறுவனத்தின் இணையதளத்தில் மானியத்துடன் கூடிய சிலிண்டரின் விலை பற்றிய தகவல்கள் குறிப்பிடப்படவில்லை.‌ இதனால் இனி வரும் காலங்களில் வீட்டு உபயோக சிலிண்ட ருக்கான மானியம் கிடைக்குமா? என்பது கேள்விக்குறியாகி உள்ளது.