இந்தியா

"குடும்பம் பட்டினியால் வாடுகிறது" - உச்சநீதிமன்றத்திற்கு வெளியே தீக்குளித்த நபர்

"குடும்பம் பட்டினியால் வாடுகிறது" - உச்சநீதிமன்றத்திற்கு வெளியே தீக்குளித்த நபர்

கலிலுல்லா

டெல்லி உச்சநீதிமன்றத்திற்கு வெளியே தனது குடும்பம் பசியால் வாடுவதாக கூறி நபர் ஒருவர் தீக்குளித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அருகிலிருந்த காவல்துறையினரால் தீ அணைக்கப்பட்டு அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

டெல்லியின் நொய்டாவைச் சேர்ந்த 50வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் உச்சநீதிமன்றத்திற்கு வெளியே தரையில் உருண்டு அழும் வீடியோ ஒன்று அங்கிருப்பவர்களால் எடுக்கப்பட்டுள்ளது. அப்போது அவர், ''நான் மிகவும் ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்தவர்; என் குடும்பம் வறுமையில் வாடுகிறது'' என்று கூறிவிட்டு, தீக்குளித்துள்ளார். உடனே அங்கிருந்த காவலர்கள் அவரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

அந்த நபர் தனது தனிப்பட்ட வாழ்க்கையில் சில பிரச்னைகளை எதிர்கொள்வதால் உச்ச நீதிமன்றத்திற்கு வந்ததாகவும், அவரிடம் விரிவாக பேசவில்லை என்றும் போலீசார் தெரிவித்தனர். அவரது உடல்நிலை குறித்து தகவல் வெளியாகவில்லை.