7 கோடி பில் போட்ட UBER
7 கோடி பில் போட்ட UBER புதிய தலைமுறை
இந்தியா

“என்னது ஏழு கோடி ரூபாய் கொடுக்கணுமா..?” - வாடிக்கையாளருக்கு பேரதிர்ச்சி கொடுத்த UBER!

PT WEB

UBER, OLA வாகனங்களில் மழைக்காலம் மற்றும் காலை, மாலை நேரங்களில் அதிகளவில் கட்டணம் வசூலிப்பது வழக்கமான நடைமுறையாகிவிட்டது. ஆனால், டெல்லி அருகேயுள்ள நொய்டாவில் ஆட்டோவில் பயணித்த வாடிக்கையாளருக்கு UBER நிறுவனம் பேரதிர்ச்சியை கொடுத்திருக்கிறது.

தீபக் என்பவர் ஆட்டோவை புக் செய்யும்போது 62 ரூபாயாக கட்டணம் இருந்திருக்கிறது. ஆட்டோவிலிருந்து இறங்கியபோது 7 கோடியே 66 லட்சம் ரூபாய் என பில் வந்துள்ளது. அதை கண்டு அவர் மட்டுமல்ல ஆட்டோ ஓட்டுநரும் அதிர்ச்சி அடைந்திருக்கின்றார்.

62 ரூபாய் கட்டணத்திற்கு 7 கோடியே 66 லட்சம் ரூபாய் பில் வந்திருப்பது குறித்து வாடிக்கையாளர் தீபக்கின் நண்பர், UBER INDIA நிறுவனத்தை எக்ஸ் வலைதளத்தில் டேக் செய்து பதிவிட்டுள்ளார். இந்நிலையில் இச்செய்தி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.