இந்தியா

நாடாளுமன்றத்தில் ஜனவரி 31, பிப்.1 ம் தேதிகளில் பூஜ்ய நேரம் இல்லை

Veeramani

நாடாளுமன்றத்தில் ஜனவரி 31 மற்றும் பிப் 1 ஆகிய தேதிகளில் பூஜ்ய நேரம் இருக்காது என நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது

2022-2023 ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கை பிப்ரவரி 1ம் தேதி காலை 11 மணிக்கு தாக்கல் செய்யப்பட உள்ளது. இந்த ஆண்டிற்கான முதல் கூட்டத் தொடர் துவங்க உள்ள நிலையில் 31ம் தேதி குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் நாடாளுமன்றத்தின் மைய மண்டபத்தில் உரையாற்ற உள்ளார். அதனைத் தொடர்ந்து 2021-22ம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்ட விபரங்கள் நாடாளுமன்றத்தில் நிதி அமைச்சகத்தால் சமர்ப்பிக்கப்படும். இதனை தொடர்ந்து ஒன்றாம் தேதி காலை 11 மணிக்கு மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் பட்ஜெட் தாக்கல் செய்ய உள்ளார். இதன் காரணமாக குறிப்பிட்ட இரண்டு நாட்களிலும் பூஜ்ஜிய நேரம் இருக்காது என நாடாளுமன்ற விவகாரங்களுக்கான துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

நாடாளுமன்ற கூட்டத்தொடரின் ஒவ்வொரு நாளும் ஏதாவது ஒரு 60 நிமிடங்கள் பூஜ்ஜிய நேரம் ஆக எடுத்துக் கொள்ளப்பட்டு அதில் தேசிய மற்றும் மாநில அளவிலான முக்கிய விவகாரங்கள் விவாதிக்கப்படும்.

பிப் 2ம் தேதி முதல் பூஜ்ஜிய நேரத்தில் பொது முக்கியத்துவம் வாய்ந்த விஷயங்களை எழுப்பலாம் எனவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அப்படி தங்களுடைய கேள்விகளை உறுப்பினர்கள் 1ம் தேதி காலை 10 மணி முதல் இணையதளம் வாயிலாக பதிவு செய்ய வேண்டும் எனவும் உறுப்பினர்களுக்கு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.