மாநிலங்களவை தலைவர் ஜெகதீப் தன்கருக்கு எதிரான எதிர்க்கட்சிகளின் நம்பிக்கையில்லா தீர்மானம் நிராகரிக்கப்பட்டது.
மாநிலங்களவையில் ஜெகதீப் தன்கர் ஒருசார்பாக நடந்து கொள்வதாகக் குற்றஞ்சாட்டிய காங்கிரஸ், திரிணாமூல் காங்கிரஸ், ஆம் ஆத்மி, திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளை சேர்ந்த 50க்கும் மேற்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் நம்பிக்கை இல்லா தீர்மான நோட்டீசை தாக்கல் செய்தனர்.
அதானி முறைகேடு உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகள் குறித்து எதிர்க்கட்சிகள் பேச ஜெக்தீப் தன்கர் அனுமதி மறுப்பதாக எதிர்க்கட்சிகள் தரப்பில் குற்றஞ்சாட்டப்பட்டது. இந்நிலையில் எதிர்க்கட்சிகள் தாக்கல் செய்த நம்பிக்கையில்லா தீர்மானத்தை மாநிலங்களவை துணைத்தலைவர் நிராகரித்துள்ளார்.