இந்தியா

இந்து-முஸ்லீம் காதல் திருமணத்தை தடுத்து நிறுத்திய உ.பி போலீஸ் - வெளுத்துவாங்கிய ஜோடி!

இந்து-முஸ்லீம் காதல் திருமணத்தை தடுத்து நிறுத்திய உ.பி போலீஸ் - வெளுத்துவாங்கிய ஜோடி!

Veeramani

மாற்று மதத்தை சேர்ந்த இருவர் காதலித்ததால், புதிய லவ் ஜிகாத் சட்டம் மூலமாக அவர்களின் திருமணத்தை நிறுத்தியது உத்தரபிரதேச போலீஸ். மதமாற்றம் என்ற பேச்சுக்கே இடமில்லை என்றும் காதல் மட்டுமே எங்களுக்கு போதும் என்றும் போலீசாருக்கு அந்த ஜோடி பதிலளித்துள்ளது.

 24 வயதான முஸ்லீம் ஆணுக்கும்,  அவரின் பக்கத்து வீட்டில் வசித்த 22 வயதான இந்து பெண்ணுக்கும் நடக்க இருந்த திருமணத்தை உத்தரபிரதேச காவல்துறையினர் புதிய மதமாற்ற எதிர்ப்பு சட்டத்தின் கீழ் தடுத்து நிறுத்தியுள்ளனர்.

இதுபற்றி தெரிவித்த அந்த முஸ்லீம் இளைஞன் "மதமாற்றம் என்ற பேச்சுக்கே இடமில்லை. அது குறித்து நாங்கள் இதுவரை எதுவும் பேசிக் கொண்டதேயில்லைஎன கூறினார் மேலும் “ நாங்கள் இருவரும் ஒருவரை ஒருவர் நேசித்தால், நாங்கள் யார் என்பதை ஒருவருக்கொருவர் ஏற்றுக்கொள்ள முடியும் என்று நான் நினைக்கிறேன். அவர் எந்த மதத்தில் இருந்தாலும் அந்த அடையாளத்துடனே நான் ஏற்றுக் கொள்வேன். அது ஒரு பிரச்னையில்லை" என்று அவர் கூறினார். அந்த இந்து பெண்ணின் தாய், இத்திருமணத்திற்கு இரு குடும்பங்களின் ஒப்புதல் இருப்பதாகவும், யாராலும் இதனை தடுத்து நிறுத்த முடியாது என தெரிவித்தார்.

கடந்த சில மாதங்களாகவே பாஜக ஆளும் மத்திய பிரதேசம், உத்தரபிரதேசம், கர்நாடகா போன்ற மாநிலங்களில் ஜவ்ஜிகாத்க்கு எதிரான சட்டம் இயற்றப்படும் என்று அம்மாநில முதல்வர்கள் தெரிவித்துவந்தனர். இந்நிலையில் உத்தரபிரதேச மாநிலத்தில் லவ்ஜிகாத்திற்கு எதிரான சட்டத்தை அம்மாநில அரசு நிறைவேற்றியது. அதன்பின்னர் லவ்ஜிகாத்திற்கு எ