இந்தியா

விமான டிக்கெட் பெறுவதற்கு ஆதார் அவசியமா?

விமான டிக்கெட் பெறுவதற்கு ஆதார் அவசியமா?

webteam

விமான டிக்கெட் பெறுவதற்கு ஆதார் எண்ணை கட்டாயமாக்கும் திட்டம் இல்லை என மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.

மத்திய அரசின் பல்வேறு திட்டங்களை பெறுவதற்கு ஆதார் எண் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து, விமான டிக்கெட் பெற, ஆதார் எண் கட்டாயமாக்கப்படும் என தகவல் வெளியானது.

இந்நிலையில், உள்துறை செயலாளர் ராஜிவ் குப்தா தலைமையில் கூடிய கூட்டத்தில், ஆதார் தகவல்களின் பாதுகாப்பு தொடர்பாக சில விளக்கங்கள் அளிக்கப்பட்டது. ஆதார் அட்டைகளின் தகவல்கள் மிகுந்த பாதுகாப்புடன் இருப்பதாகவும், அது குறித்தான தகவல்கள் வெறும் வதந்திகள் என்று தெரிவிக்கப்பட்டது. மேலும் விமான பயணச்சீட்டுகள் முன்பதிவு செய்வதற்கோ அல்லது பெறுவதற்கோ ஆதார் எண்ணை கட்டாயமாக்கும் திட்டமில்லை என மத்திய உள்துறை அமைச்சகத்திற்கான நாடாளுமன்ற நிலைக்குழு தெரிவித்துள்ளது.