இந்தியா

சமையல் கேஸ் மானியம் நீடிக்கும்: மத்திய அமைச்சர்

webteam

ஏழைகளுக்கான சமையல் கேஸ் மானியம் நீடிக்கும் என்று பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் சொன்னார்.

சமையல் கேஸ் விலையை மாதந்தோறும் 4 ரூபாய் உயர்த்துமாறு பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளதாக பெட்ரோலியத்துறை மந்திரி தர்மேந்திர பிரதான் சமீபத்தில் பாராளுமன்றத்தில் கூறினார். அடுத்த ஆண்டு மார்ச் மாதத்துடன் சமையல் கேஸ் மானியம் வழங்குவது நிறுத்தப்படும் என்றும் அவர் கூறியிருந்தார். இதற்கு எதிர்ப்பு எழுந்தநிலையில், மானியம் வழங்குவது சீரமைக்கப்படும் என்று தர்மேந்திர பிரதான் கூறினார்.

இந்நிலையில், அகர்தலாவில் பேசிய பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் ‘வீட்டு உபயோகத்துக்காக வழங்கப்பட்டு வரும் சமையல் கேஸ் மானியத்தை ரத்து செய்யும் திட்டம் இல்லை. ஏழைகளுக்கும், சாமானியர்களுக்கும் கேஸ் மற்றும் மண்எண்ணெய்க்கான மானியம் நீடிக்கும்’ என்றார்.