ஆந்திராவில் ஹெல்மெட் அணிந்தால் தான் இருசக்கர வாகனங்களுக்கு பெட்ரோல் வழங்க வேண்டும் என்ற புதிய விதிமுறை அமலுக்கு வந்துள்ளது.
ஆந்திர மாநிலத்தில் இருசக்கர வாகன ஓட்டிகளை ஹெல்மெட் அணிய வைக்கவும், 4 சக்கர வாகன ஓட்டிகளை சீட் பெல்ட் அணிய வைக்கவும் அரசு தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளது. இதனால் சீட் பெல்ட் மற்றும் ஹெல்மெட் அணிந்துள்ள வாகன ஓட்டிகளுக்கு மட்டுமே பெட்ரோல் வழங்க வேண்டும் என்று பெட்ரோல் விற்பனையாளர்களுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அத்துடன் ஹெல்மெட் அணிவதன் முக்கியத்துவம் மற்றும் விபத்தால் ஏற்படும் விளைவுகள் குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவும் அரசு அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இதுகுறித்து விளக்கமளித்துள்ள ஆந்திர அரசின் சாலைப் போக்குவரத்துத் துறை, விபத்துக்களை குறைக்கவே இந்த நடவடிக்கை என்று கூறியுள்ளது.