இந்தியா

விமான நிலையங்களில் ஹேண்ட்பேக் சோதனை ரத்து

விமான நிலையங்களில் ஹேண்ட்பேக் சோதனை ரத்து

webteam

சென்னை, லக்னோ, ஜெய்பூர் உள்ளிட்ட 6 விமான நிலையங்களில், பயணிகளின் கைப்பைகளுக்கு சீல் வைப்பது ஜுன் 1ம் தேதி முதல் நிறுத்தப்படுகிறது. 

இந்திய விமான நிலையங்களில் பயணிகள் தங்களுடன் கொண்டு செல்லும் ஹேண்ட் பேக், சிறிய பை, சூட்கேஸ் உள்ளிட்ட பொருட்களுக்கு பாதுகாப்பு பரிசோதனைக்கான டேக் ஒட்டப்படுவது வழக்கம். இந்நிலையில், ஜெய்ப்பூர், கவுகாத்தி, லக்னோ, திருவனந்தபுரம், பாட்னா மற்றும் சென்னை உள்பட 6 விமான நிலையங்களில், உள்நாட்டு விமான பயணிகளின் பைகளுக்கு டேக் மற்றும் சீல் வைப்பது போன்ற நடவடிக்கைகள், ஜுன் 1ம் தேதி முதல் நிறுத்தப்படுகிறது என சிஐஎஸ்எப் டைரக்டர் ஜெனரல் ஓ.பி. சிங் தெரிவித்துள்ளார்.  

கையில் கொண்டு செல்லும், பைகள், லக்கேஜ்களை ஸ்கேன் செய்ய போதிய பாதுகாப்பு கருவிகள், சிசிடிவி கேமரா பொருத்தப்பட்டுள்ளதால் இந்த முறை நிறுத்தப்படுகிறது என்றும், இதனால் பயணிகளுக்கு சுதந்திரமான பாதுகாப்பு சூழலை உருவாக்கி தர முடியும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். 

முன்னதாக டெல்லி, மும்பை, கொச்சி, பெங்களுரூ, ஹைதராபாத், கொல்கத்தா, அகமதாபாத் உள்ளிட்ட 7 விமான நிலையங்களில் இந்த நடைமுறை நிறுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.