தொழிலாளர்களுக்கு முதலாளி தரும் 50 ஆயிரம் ரூபாய் வரையான பரிசுகளுக்கு ஜிஎஸ்டியில் இருந்து முழு விலக்கு பெறலாம் என்று மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.
தொழில் நிறுவன உரிமையாளர்கள் தங்களிடம் பணிபுரிபவர்களுக்கு, ரூ.50000 வரை பரிசு பொருட்கள் வழங்கினால் அதற்கு சேவை வரி கிடையாது என்றும், கேளிக்கை விடுதி, உடற்பயிற்சிக் கூடம் உள்ளிட்டவற்றில் இலவச உறுப்பினராக தனது தொழிலாளர்களை சேர்த்தாலும் அவை ஜிஎஸ்டி கணக்கில் வராது என்றும் நிதி அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. மேலும், பரிசுகளின் மதிப்பு 50,000 ரூபாய்க்கு அதிகமாக இருந்தால் அதற்கு ஜி.எஸ்.டி.உண்டு எனவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.