இந்தியா

"இனி இபாஸ் கூடாது" மத்திய உள்துறை செயலர் அதிரடி !

"இனி இபாஸ் கூடாது" மத்திய உள்துறை செயலர் அதிரடி !

jagadeesh

மாநிலங்கள் இடையே மற்றும் மாநிலத்துக்குள் பயணிக்க இ-பாஸ் கூடாது என்று அனைத்து மாநில தலைமை செயலர்களுக்கும் உள்துறை செயலர் கடிதம் எழுதியுள்ளார்.

இது குறித்து அனைத்து மாநில தலைமை செயலர்களுக்கும் மத்திய உள்துறை செயலர் எழுதிய கடிதத்தில் "நாடு முழுவதும் அறிவிக்கப்பட்டுள்ள 3 ஆம் கட்ட ஊரடங்கு தளர்வுகள்படி, மாநிலங்கள் இடையே, மாநிலத்துக்குள் பயணிக்க எந்த கட்டுப்பாடும் விதிக்க கூடாது. மேலும்
பயணத்துக்கென தனியாக அனுமதி, ஒப்புதல், இ பாஸ் போன்றவை கூடாது" என தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.