இந்தியா

'8ம் வகுப்பு வரை கட்டாய தேர்ச்சி ரத்து' - மத்திய அமைச்சர்

'8ம் வகுப்பு வரை கட்டாய தேர்ச்சி ரத்து' - மத்திய அமைச்சர்

webteam

8-ம் வகுப்பு வரை கட்டாய தேர்ச்சி என்ற முறை அடுத்த கல்வி ஆண்டு முதல் ரத்து செய்யப்படும் என மத்திய அமைச்சர் தெரிவித்துள்ளார். 

கல்வி உரிமை சட்டம்-2009 ன் படி 1ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்புவரை அனைத்து மாணவ, மாணவிகளும் கட்டாய தேர்ச்சி செய்யப்பட்டு வருகின்றனர். இந்நிலையில், திரிபுரா மாநிலம் அகர்தலாவில் பேசிய, மத்திய அமைச்சர் மகேந்திர நாத் பாண்டே கூறும்போது, 1ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை மாணவர்கள் கட்டாய தேர்ச்சி செய்யப்படுவதால், அவர்களின் கல்வித்தரம் மோசமடைந்தள்ளதாகத் தெரிவித்தார். எனவே, அடுத்த கல்வி ஆண்டு முதல் இந்த முறை ரத்து செய்யப்பட உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.